close
Choose your channels

சொன்னபடியே தாளிச்ச கமல்: அப்பாவி மகத்துக்கு ஒரு குறும்படம்

Saturday, August 25, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமமோ கடந்த சில மணி நேரங்களுக்கு முன் வெளியான போது இன்று கண்டிப்பாக மகத் கோஷ்டியை தாளிச்சு எடுக்கவுள்ளதாக வாக்கு அளித்தார் கமல். அதன்படி சற்றுமுன் வெளியான அடுத்த புரமோவில் மகத்தை வாங்கு வாங்கு என்று வாங்கிவிட்டதாக தெரிகிறது.

மகத் மற்றும் மும்தாஜ் இருவரில் யார் மோசம்? என்ற கமலின் கேள்விக்கு ஒட்டுமொத்தமாக மக்கள் 'மகத்' பெயரை கூற, மகத் ஒன்றுமே தெரியாத அப்பாவி போல் உட்கார்ந்திருந்தார். அப்போது மகத் ஒன்றுமே நடக்காத மாதிரி சிரித்து கொண்டே ;நான் என்ன சார் சொல்றது' என்று கூற அதற்கு கமல் 'நீங்கள் ஒன்றும் சொல்ல வேண்டாம், நாங்க சொல்றோம் உங்களுக்காக ஒரு குறும்படம்' என்று கூறுகிறார்.

எனவே இன்று ஒளிபரப்பாகும் குறும்படத்தில் மகத்தின் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறும் என்பது நிச்சயம். இருப்பினும் மகத் இந்த வாரத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பதால் மக்கள் விருப்பப்படி அவர் வெளியேற்றப்படுவாரா? என்ற சந்தேகமும் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.