close
Choose your channels

இயக்குனர் அவதாரம் எடுக்கும் பிரபல குணசித்திர நடிகர்!

Tuesday, February 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த்திரையுலகில் குணசித்திர மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வருபவர் நடிகர் போஸ் வெங்கட். குறிப்பாக இவர் பல படங்களில் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இவர் போலீஸ் கேரக்டரில் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நடித்திருந்தார் என்பதும் அந்த படத்தில் இவரது சிறப்பான நடிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் போஸ் வெங்கட் தற்போது ஒரு படத்தை இயக்கவுள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது, 'நான் சினிமாவுக்கு வந்ததே இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆசையில்தான். ஆனால் நடிப்பதற்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டிருந்ததால் இயக்குனர் ஆகும் கனவு தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. தற்போதுதான் காலம் கைகூடியுள்ளது.

கிராமத்தில் இருந்து சென்னைக்கு படிக்க வந்த மாணவர்களின் மனநிலை பற்றிய படம் இது. இதில் ஒரு இளமையான காதலும் உள்ளது. இன்றைய இளைஞர்கள் ரசிக்கும் வகையில் காமெடி மற்றும் ரொமான்ஸ் அம்சங்கள் இந்த படத்தில் அதிகம் இருக்கும். இந்த படத்திற்காக புதுமுகங்களை தேடி வருகிறேன். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும். ஒரே ஷெட்யூலில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிக்க திட்டமிட்டுள்ளது என்று போஸ் வெங்கட் கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் ஆடுகளம் நரேன், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், புதுமுகம் வலீனா பிரிசஸ் உள்பட பலர் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.