வெளிநாட்டிலிருந்து தமிழகம் திரும்பி, சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டவர் திடீர் மரணம்: அதிர்ச்சி தகவல் 

வெளி நாட்டிலிருந்து தமிழகம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களுக்கு வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்ற விதி உள்ளது. இதன்படி மலேசியாவில் இருந்து சமீபத்தில் 61 வயது முகமது ஷாரிப் என்பவர் சென்னைக்கு வந்துள்ளார். அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகள் தனிமைப்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று மாலை அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்க்க ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்னரே அவர் உயிர் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது

இந்த தகவல் மற்ற தனிமைப்படுத்தப்பட்டவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்து, தனிமைப்படுத்துதல் காலம் முடிந்தவுடன் குடும்பத்தை பார்க்கலாம் என்று ஆசை ஆசையுடன் காத்திருந்தவர் திடீரென உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இதுபோன்ற தனிமைப்படுத்துதல் இடங்களில் அவசரத்திற்காக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ வசதி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது

More News

100 வயது மூதாட்டியை கட்டிலோடு இழுத்து வங்கிக்கு சென்ற 60 வயது மகள்: அதிர்ச்சி வீடியோ

100 வயது மூதாட்டியை அவரது 60 வயது மகள் கட்டிலோடு வங்கிக்கு இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

'விஸ்வாசம்' பட தயாரிப்பாளருக்கு கிடைத்த புதிய பதவி

கமல்ஹாசன் நடித்த 'மூன்றாம் பிறை'என்ற படம் தொடங்கி தமிழில் பல திரைப்படங்களை தயாரித்தவர் சத்யஜோதி தியாகராஜன். இவர் சமீபத்தில் தயாரித்த அஜித் நடித்த 'விஸ்வாசம்' சூப்பர் ஹிட்டாகி பெரும் வசூலை வாரி குவித்தது. 

எனக்கும் மன அழுத்தம் இருந்தது, இறந்துவிடுவேனோ என பயந்தேன்: பிரபல நடிகை

நடிகர் சுஷாந்த்சிங் நேற்று தற்கொலை செய்து கொண்டது இந்திய திரையுலகையே உலுக்கிவிட்டது என்று கூறலாம். 34 வயதில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வது என்பது மிகப்பெரிய கொடுமையாக பார்க்கப்படுகிறது.

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு: என்னென்ன இயங்கும்? எப்பொழுது வரை இயங்கும்?

சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு வரும் 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஊரடங்கின்போது என்னென்ன இயங்கும்?

நாளை முதல் சென்னையில் கடைகள் மூடப்படுகிறது? வணிகர் சங்கம் அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு சென்னையில் மிகவும் அதிகரித்து வரும் நிலையில் சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு தீவிர ஊரடங்கு அமல்படுத்த மருத்துவர் குழுவினர் முதல்வருக்கு