'காஞ்சனா 3' படம் பார்க்க சென்றவர் 10 ரூபாய் பிரச்சனையில் கொலை!

  • IndiaGlitz, [Saturday,May 11 2019]

பெங்களூரில் காஞ்சனா 3' படம் பார்க்க சென்ற ஒருவர் பத்தே பத்து ரூபாய் பிரச்சனையில் கொலை செய்யப்பட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய 'காஞ்சனா 3' திரைப்படத்தை பெங்களூரில் உள்ள ஒரு திரையரங்கில் பார்க்க பரணிதரன் என்பவர் கடந்த வியாழன் அன்று சென்றுள்ளார். அவர் பைக்கை பார்க் செய்தபோது அங்கிருந்த பைக் கட்டணம் வசூலிக்கும் நபர் ரூ.10 கேட்டுள்ளார். ஆனால் பரணிதரன் பைக் கட்டணத்தை தர மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்னொரு திரையரங்க ஊழியரும் வந்து இருவரும் பரணிதரனை மறைவான இடத்திற்கு தூக்கி சென்று அடித்து உதைத்துள்ளனர். இதில் பரணிதரன் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் பரணிதரன் மரணத்திற்கு காரணமாக இரண்டு திரையரங்கு ஊழியர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பத்து ரூபாய் பிரச்சனையால் விலை மதிப்பில்லாத ஒரு உயிர் பலியாகியிருப்பது அந்த பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

More News

சிஎஸ்கே வெற்றி குறித்து திரையுலகினர்களின் கருத்து!

நேற்று நடைபெற்ற இரண்டாவது பிளே ஆப் போட்டியில் சிங்க நடை போட்டு வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி, மீண்டும் மும்பை அணியுடன் இறுதிப்போட்டியில் மோத காத்திருக்கின்றது.

சறுக்குனாலும் யானை யானைதான்: வெற்றிக்கு பின் ஹர்பஜன்சிங் டுவீட்

நேற்று விசாகப்பட்டணம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது பிளே ஆஃப் போட்டியில் சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகள் மோதிய நிலையில் டெல்லி அணியை சிஎஸ்கே அணி 6 விக்கெட்டுக்கள்

'தல தோனிக்கு வாழ்த்து கூறிய Mr.லோக்கல் டீம்!

இன்று தல தோனியின் சிங்கப்படையான சிஎஸ்கே அணிக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணிக்கு பிளே ஆஃப் 2 போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெறவிருக்கின்றது.

'தல' தோற்க வேண்டும் என கடவுளிடம் வேண்டினேன்: ரசிகரின் வித்தியாசமான வேண்டுதல்

தல தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி முதல் பிளே ஆஃப் போட்டியில் மும்பையிடம் தோற்க வேண்டும் என கடவுளிடம் வேண்டியதாக தோனியின் தீவிர ரசிகரும்

அடுத்தவர் மனைவியை கர்ப்பமாக்கிய ஜிம் பயிற்சியாளர் திருமண தினத்தில் கைது!

அடுத்தவர் மனைவியை கர்ப்பமாக்கி கைவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற பெங்களூரை சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.