close
Choose your channels

தமிழ் உள்பட 3 மொழிகளில் சொந்தக்குரலில் டப்பிங் பேசிய ஆக்சன் ஹீரோ!

Wednesday, December 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகில் மாஸ் நடிகர்களில் ஒருவர் தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி என 3 மொழிகளில் சொந்தக்குரலில் டப்பிங் பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

தமிழ் திரையுலகின் ஆக்சன் ஹீரோ விஷால் என்பதும் இவரது படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் விஷால் நடித்து முடித்துள்ள ’லத்தி’ என்ற திரைப்படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்த நிலையில் விஷால் தனது பகுதிக்கான டப்பிங்கை பேசி முடித்தார். அவர் தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் சொந்தக்குரலில் பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வினோத் குமார் இயக்கத்தில் விஷாலின் நண்பர்களான நடிகர்கள் ராணா மற்றும் நந்தா தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் விஷால் ஜோடியாக சுனைனா நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படம் அதிரடி ஆக்ஷன் படம் என்றும் இந்த படத்தில் விஷால் டூப் இன்றி பல காட்சிகளில் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்ததால் இரண்டு முறை காயம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.