close
Choose your channels

'பிகில்' இசை விழாவில் மாஸ்டர் பிளான்: விஜய் ரசிகர்கள் குஷி!

Tuesday, September 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 19ம் தேதி சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான மேடை அமைக்கும் பணி கிட்டத்தட்ட நிறைவடையும் வகையில் உள்ளதால் இந்த விழாவை மிக சிறப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த விழாவில் ’பிகில்’ படத்தில் இடம்பெற்ற ஆறு பாடல்களையும் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் மேடையில் கம்போஸ் செய்து, பாடகர்களை பாட வைக்க உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. இந்த படத்தில் விஜய்யும் ஒரு பாடலை பாடி உள்ளதால் இந்த ஆறு பாடல்களில் ஒரு பாடலை விஜய்யே பாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாஸ்டர் பிளானை படக்குழுவினர் ரகசியமாக வைத்திருந்த போதிலும், தற்போது இந்த செய்தி கசிந்து விட்டதால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதுவரை விஜய் பாடல் பாடி அதை நேரில் ரசிகர்கள் பார்த்ததில்லை என்பதால் இந்த அரிய வாய்ப்பு தற்போது விஜய் ரசிகர்களுக்கு கிடைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. அட்லி இயக்கத்த்ல் உருவாகி வரும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.