'பிகில்' இசை விழாவில் மாஸ்டர் பிளான்: விஜய் ரசிகர்கள் குஷி!

  • IndiaGlitz, [Tuesday,September 17 2019]

தளபதி விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 19ம் தேதி சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான மேடை அமைக்கும் பணி கிட்டத்தட்ட நிறைவடையும் வகையில் உள்ளதால் இந்த விழாவை மிக சிறப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த விழாவில் ’பிகில்’ படத்தில் இடம்பெற்ற ஆறு பாடல்களையும் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் மேடையில் கம்போஸ் செய்து, பாடகர்களை பாட வைக்க உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. இந்த படத்தில் விஜய்யும் ஒரு பாடலை பாடி உள்ளதால் இந்த ஆறு பாடல்களில் ஒரு பாடலை விஜய்யே பாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாஸ்டர் பிளானை படக்குழுவினர் ரகசியமாக வைத்திருந்த போதிலும், தற்போது இந்த செய்தி கசிந்து விட்டதால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதுவரை விஜய் பாடல் பாடி அதை நேரில் ரசிகர்கள் பார்த்ததில்லை என்பதால் இந்த அரிய வாய்ப்பு தற்போது விஜய் ரசிகர்களுக்கு கிடைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. அட்லி இயக்கத்த்ல் உருவாகி வரும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

More News

பா.ரஞ்சித்-ஆர்யா படத்தின் டைட்டில் குறித்த தகவல்

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தில் ஆர்யா நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தின் கதை ஒரு பாக்ஸரின் கதை என்றும் வடசென்னையை மையமாக வைத்து

நயன்தாராவின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதிக்கு பதிலாக விஜய் ஆண்டனி?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த மலையாள திரைப்படமான 'லவ் ஆக்சன் டிராமா' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கேரளாவில் பெரும் வரவேற்பை பெற்றது.

போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர் கைது! அறிவாலயம் காரணமா?

சமீபத்தில் சென்னையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் பேனர் விழுந்து துரதிஷ்டவசமாக மரணமடைந்த நிலையில், திரையுலகினர் மற்றும் அரசியல்வாதிகள்

அஜித் இயக்குனரின் அடுத்த படத்தில் விஜய் ஆண்டனி!

அஜித் நடித்த 'முகவரி', சிம்பு நடித்த 'தொட்டி ஜெயா' போன்ற படங்களை இயக்கியவர் V.Z துரை. நீண்ட இடைவெளிக்கு பின் இவர் இயக்கிய 'இருட்டு' என்ற திரைப்படம் வரும் அக்டோபர் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

'பிகில்' ரிலீஸ் தேதி குறித்து அர்ச்சனா கல்பாதியின் முக்கிய அறிவிப்பு

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பிகில்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது மின்னல் வேகத்தில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.