இம்மாதம் ஓய்வுபெற இருந்த மருத்துவமனை ஊழியர் கொரோனாவுக்கு பலி: அதிர்ச்சி தகவல்

டெல்லியை சேர்ந்த மருத்துவமனை ஊழியர் ஒருவர் இம்மாதம் 30ஆம் தேதி ஓய்வு பெற இருந்த நிலையில் திடீரென அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

டெல்லியில் உள்ள லோக் நாயக் என்ற மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தவர் சரண் சிங். இவர் டெல்லியில் உள்ள லோக்நாயக் என்ற மருத்துவமனையில் மயக்க மருந்து பிரிவில் பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த மே மாதம் 12ஆம் தேதி சரண்சிங் அவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டபோது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்

இந்த நிலையில் நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். 59 வயதான சரண்சிங் வரும் 30 ஆம் தேதி ஓய்வு பெற இருந்த நிலையில் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக மருத்துவமனையில் சேவை செய்து வந்த சரண்சிங் ஓய்வு பெற சில நாட்கள் இருந்தபோது கொரோனாவுக்கு பலியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

சாக்லேட் பாய் நடிகர் மாதவன் பிறந்த தினம் இன்று...

அலைபாயுதே படத்தின் மூலம் பெண்களின் மனதை கொள்ளைக் கொண்ட நடிகர் மாதவன் தமிழ் சினிமா உலகிற்கு சாக்லேட் பாயாகவே அறிமுகமானார்.

3 பேர்களுக்காக மொத்தம் விமானத்தையும் புக் செய்தாரா பிரபல நடிகர்: பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவரும், பிரபல பாலிவுட் நடிகருமான அக்ஷய் குமார் தனது சகோதரி மற்றும் அவருடைய இரண்டு மகள்கள் விமானத்தில் பயணம் செய்வதற்காக

ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது அட்லியின் அடுத்த படம்! பரபரப்பு தகவல்

தளபதி விஜய் நடித்த தெறி, மெர்சல், மற்றும் பிகில் ஆகிய ஆகிய சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவர் அட்லி. இவர் தனது அடுத்தப் படத்தை விரைவில் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கொரோனா 'கிட்'களை கொள்ளையடித்த குரங்குகள்: பொதுமக்கள் அச்சம்

கொரோனா வைரஸ் மனிதர்களை மட்டுமின்றி விலங்குகளையும் தாக்கும் அபாயம் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது கொரோனா பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டு வைத்திருந்த ரத்தமாதிரிகள்

தமிழகத்தில் முதல்முறையாக 1000ஐ கடந்த கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் வரை 500 முதல் 600 பேர்களாக இருந்த நிலையில் இன்று இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 1000க்கும் மேற்பட்டவர்கள்