ரஜினியின் 'கபாலி'யில் இணைந்த ஆம்புலன்ஸ் டிரைவர்

  • IndiaGlitz, [Wednesday,October 07 2015]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அடுத்த கட்டமாக சென்னை அருகேயுள்ள பின்னி மில்லில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இங்கு பத்து நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும், இந்த படப்பிடிப்பை அடுத்து படக்குழுவினர் மலேசியா செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் 'கபாலி' படத்தில் புதியதாக ஒரு நடிகர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. கேங்ஸ்டார் படமான இந்த படத்தில் கேங்ஸ்டார் கூட்டத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் 'ஆரஞ்சு மிட்டாய்' படத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக நடித்த நடிகர் ஆறுமுகம் பாலா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் மலேசிய படப்பிடிப்பின்போது படக்குழுவினர்களுடன் இணைந்து கொள்வார் என தெரிகிறது.

ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, 'மெட்ராஸ்' கலையரசன், 'அட்டக்கத்தி' தினேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

More News

இன்று நள்ளிரவு அஜித் ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி

அஜீத் நடித்த 'வேதாளம்' திரைப்படத்தின் டீசர் இன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே ...

பாலாவுடன் மீண்டும் இணையும் முன்னணி ஹீரோக்கள்

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள 'தாரை தப்பட்டை' திரைப்படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

'கபாலி'யில் பஞ்ச் வசனம் ஏன் இல்லை? ரஞ்சித் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கபாலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகேயுள்ள பின்னி மில்லில் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது...

'எங்களுக்கு பிரச்சனை வந்தால் முதலில் நாடுவது கமல்ஹானைத்தான்' - விஷால்

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது...

கமலும் நானும் ஒன்றா? சிம்பு

இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்த 'இது நம்ம ஆளு' திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும்...