வங்கக்கடலில் புதிய புயல்… சென்னை வானிலை தகவல்!

  • IndiaGlitz, [Tuesday,November 30 2021]

தெற்கு அந்தமான் அருகே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருக்கிறது. இது அடுத்த 48 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தாய்லாந்து மற்றும் அதையொட்டி இருக்கக்கூடிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. இது அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகவும் 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தின் ஒருசில மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பொழியும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

இந்தக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியானது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் தற்போது சுறாவளி காற்றாக மாறும் எனவும் பின்னர் வடக்கு ஆந்திர மற்றும் தெற்கு ஒரிசா இடையே நகரும் எனவும் கூறப்படுகிறது.

இதனால் தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பொழியும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் தொடர்ந்து 2 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

More News

7 ஆவது முறையாக விருது… அசத்தும் கால்பந்து கிங் லியோனல் மெஸ்ஸி!

கால்பந்து உலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்து வரும் லியோனல் மெஸ்ஸிக்கு “பாலன் டி ஓர்“ விருது வழங்கப்பட்டு உள்ளது.

கமல்ஹாசன் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மக்கள் நீதி மய்யம்!

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி விட்டதாக வெளிவந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் சற்றுமுன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

திரையரங்குகளுக்கு சீல் வைக்கப்படும்: கலெக்டர் எச்சரிக்கையால் திரையுலகினர் அதிர்ச்சி!

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை அனுமதிக்கும் திரையரங்குகளுக்கு சீல் வைக்கப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளது திரையுலகினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

செம்மையா பண்ற நீ: மீண்டும் மோதும் தாமரை-பிரியங்கா!

கடந்த சில நாட்களாகவே தாமரை மற்றும் பிரியங்கா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது என்பதும் இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதங்கள் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே

மாறி மாறி பேசும் பிக்பாஸ் ராஜூ: நெட்டிசன்கள் போட்ட குறும்படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று கேப்டன் நிரூப் கூறிய ஒரு ஐடியாவுக்கு இமான் அண்ணாச்சி, வருண் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பதும் இதனால் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே.