சன்னி லியோன் மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்

  • IndiaGlitz, [Saturday,February 10 2018]

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் தமிழ் உள்பட மூன்று மொழிகளில் நடித்து வரும் 'வீரமாதேவி' என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், சென்னையில் நடைபெறும் படப்பிடிப்பில் சன்னிலியோன் கலந்து கொள்ள தடை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் இனோச் மோசஸ் என்பவர் நசரத்பேட்டை காவல் நிலையத்திலும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரில் சன்னிலியோனின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் உள்ளது. இவை இளைஞர்களின் மனதை கெடுக்கும் வகையில் உள்ளது. இந்த நிலையில் சன்னிலியோன் படப்பிடிப்பு சென்னையில் நடந்தால் அவரை காண பெருங்கூட்டம் கூடும் வாய்ப்பு உள்ளது. இதனால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க சன்னிலியோன் சென்னை படப்பிடிப்பில் கலந்து கொள்ள தடை விதிக்க வேண்டும். மேலும் அவர் நடிக்கும் வீரமாதேவி திரைப்படம் தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றும் வகையில் இருப்பதால் அவர் இந்த படத்தில் நடிக்கக்கூடாது என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

சன்னிலியோன் மீதான புகாருக்கு சென்னை போலீஸ் கமிஷனர் எந்தவகையான நடவடிக்கை எடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்