முருகதாஸ்-மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்' படத்தின் வசூல் விபரங்கள்

  • IndiaGlitz, [Monday,October 16 2017]

கடந்த ஆயுதபூஜை தினத்தில் வெளியான பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமான 'ஸ்பைடர்' திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றதால் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. கடந்த இரண்டு வாரமாக புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகாததால் ஓரளவுக்கு சுமாரான வசூலை பெற்று சராசரி வெற்றி படங்களில் இணைந்துள்ளது.

கடந்த வார இறுதி நாட்களில் இந்த படம் சென்னையில் 17 திரையரங்க வளாகங்களில் 139 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.21,64,920வசூல் செய்துள்ளது. மேலும் இந்த படம் சென்னையில் செப்.27 முதல் அக்.15 வரை ரூ.3,66,47,312 வசூல் செய்துள்ளது என்பதும், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் சேர்த்து ரூ.4,54,44,369 என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படம் தமிழகம் முழுவதும் 19 நாட்களில் ரூ.26 கோடி வசூல் செய்துள்ளது. சென்னையில் ரூ.4.5 கோடியும், செங்கல்பட்டில் ரூ.8.35 கோடியும், கோவையில் ரு.5.2 கோடியும் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பாலியல் தொழிலாளி வேடத்தில் பிரபல நடிகை

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் 'அன்னியன்' உள்பட ஒருசில வெற்றி படங்களில் நடித்து பிரபலமாக இருந்த நடிகை சதா, தற்போது உருவாகி வரும் 'டார்ச்லைட்' என்ற படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்து வருகிறார்

இன்று காலை 10 மணிக்கு 'மெர்சல்' திருப்பம் ஏற்படுமா?

தளபதி விஜய் நடித்த இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'மெர்சல்' திரைப்படம் உலகம் முழுவதும் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளது.

சென்னை காசி தியேட்டரின் முடிவால் விஜய் ரசிகர்கள் சோகம்

சென்னை காசி தியேட்டர் என்பது ரசிகர்கள் மற்றும் செலிபிரிட்டிகளின் விரும்பத்தக்க திரையரங்கம். புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆனால் இந்த தியேட்டர் உள்ள சாலையே கலகலப்பாக இருக்கும்

அறம் படத்திற்காக நயன்தாராவுக்கு சல்யூட் அடித்த பிரபல இயக்குனர்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கலெக்டராக நடித்துள்ள 'அறம்' திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் திரையிட திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது இந்த படம் நவம்பர் 3ஆம் தேதி ரிலீஸ் ஆகும்

முதல்வர் - விஜய் சந்திப்பில் நடந்தது என்ன?

தளபதி விஜய் சற்று முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.