18 வயது தமிழக இளம் விஞ்ஞானிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து

  • IndiaGlitz, [Saturday,June 24 2017]

தமிழகத்தை சேர்ந்த 18 வயது இளம் விஞ்ஞானி ரிஃபாத் ஷாரூக் உருவாக்கிய வெறும் 64 கிராம் கொண்ட 'கலாம்சட்' என்ற செயற்கைக்கோள் சமீபத்தில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
73 மைல்கள் உயரம் தொடும் இந்த கலாம்சாட், விண்வெளியில் சுமார் 10 முதல் 12 நிமிடங்கள் தங்கி தகவல்களைச் சேகரிக்கும் என்றும் இதன் மூலம் 3D பிரின்டட் கார்பன் இழைகள் விண்வெளியில் எத்தனை நேரம் பயணிக்கமுடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், , பூமியின் கதிர்வீச்சு, முடுக்கம், சுழற்சி மற்றும் காந்தப்புலன் குறித்த ஆய்வுகளையும் இது மேற்கொள்ளும்.
இத்தகைய பெருமையுடைய இந்த செயற்கைக்கோளை உருவாக்கிய தமிழக இளைஞருக்கு உலகம் முழுவதும் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. தமிழக அரசு ரூ.10 லட்சம் பரிசு அளித்து ரிஃபாத் ஷாரூகை கெளரவித்துள்ளது.
இந்த நிலையில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூகவலைத்தளத்தில் ரிஃபாத் ஷாரூக்கை வாழ்த்தியுள்ளார். இந்த வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள ரிஃபாத் ஷாரூக், 'உங்களது வாழ்த்துகளுக்கு நன்றி. எங்கள் டீம் முழுவதுமே உங்கள் ரசிகர்கள் தான். நங்கள் உங்கள் இசையை கேட்டுத்தான் பாசிட்டிவ் எண்ணங்களை பெற்றோம்' என்று கூறியுள்ளார்.

More News

ரஜினி கட்சியில் அஜித், விஜய் இணணந்தால்....எஸ்.வி.சேகர்

அரசியல் களத்தில் ரஜினியுடன் அஜித், விஜய் இணைந்தால் பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும் என நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்...

விஜய்யின் வெற்றி நாயகிகள்

கடந்த 1992ஆம் ஆண்டு 'நாளைய தீர்ப்பு' படத்தில் அறிமுகமாகிய விஜய், 25 வருடங்கள் தொடர்ந்து திரையுலகில் வெற்றி நாயகனாக நீடித்து இருப்பது மட்டுமின்றி 'பூவே உனக்காக', 'காதலுக்கு மரியாதை' போன்ற படங்களில் எப்படி ஸ்லிம் ஆக இருந்தாரோ அதேபோல் இன்றும் ஸ்லிம் மற்றும் ஸ்டைலாக உள்ளார். விஜய்க்கு ஜோடியாக ஆரம்பகட்டத்தில் நடித்த பல நடிகைகள் தற்போதĬ

மறக்கமுடியாத மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்த நாள் சிறப்பு பகிர்வு

மெல்லிசை மன்னர், திரையுலக இசை மேதை எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் பிறந்த நாளான இன்று அவரது நினைவுகளை பகிர்ந்து கொள்வோம்...

பாடலாசிரியையாக மாறிய 'சென்னை 28' பட நடிகை

தனுஷ், சிம்பு உள்பட ஒருசில நடிகர்கள் பாடலாசிரியர்களாகவும் உள்ளனர் என்பது நாம் அறிந்ததே...

'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்கும் 14 பேர் இவர்களா?

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் உலக நாயகன் கமல்ஹாசன் நடத்தும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி நாளை முதல் தொடங்கவுள்ளது.