ஏ.ஆர்.ரஹ்மானின் தாய்மொழி இதுதான். தனுஷ் விளக்கம்

  • IndiaGlitz, [Monday,July 17 2017]

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் லண்டனில் நடத்திய 'நேற்று இன்று நாளை' என்ற இசை நிகழ்ச்சியில் இந்தி பாடல்களை அவர் பாடவில்லை என்று குற்றம் சாட்டி நிகழ்ச்சியின் பாதியிலேயே வட இந்திய ரசிகர்கள் எழுந்து போனதாக செய்திகள் வெளிவந்தன.

இந்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் கடந்த இரண்டு நாட்களாக வாத, விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலானோர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இசைக்கு மொழி கிடையாது என்றும் அது எல்லா மொழிகளுக்கும் பொதுவானது என்று பல திரையுலக பிரபலங்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நடிகர் தனுஷ் ஆதரவு அளித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எந்த மொழியும் கிடையாது. அவருடைய தாய்மொழி இசையை தவிர வெறு எதூவும் இல்லை. ரஹ்மான் ரஹ்மான் தான் என்று அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

More News

அதர்வாவின் 'ஜெமினிகணேசன்', கிருஷ்ணாவின் 'பண்டிகை ஓப்பனிங் வசூல் நிலவரம்

கடந்த வெள்ளியன்று வெளியான தமிழ் படங்களில் குறிப்பிடத்தக்க படங்களான அதர்வா நடித்த 'ஜெமினிகணேசனும் சுருளிராஜன்' படமும், கிருஷ்ணாவின் 'பண்டிகை' படமும் நல்ல ஓப்பனிங் வசூலை பெற்றுள்ளது....

மு.க.ஸ்டாலினுக்கு கமல் நன்றி

உலக நாயகன் கமல்ஹாசனை தமிழக அமைச்சர்கள் மிரட்டும் வகையில் கருத்து தெரிவித்து வரும் நிலையில் விஷால் கமலுக்கு ஆதரவாக திரையுலகினர் இருப்பார்கள் என்று தெரிவித்தார்...

கமல் கருத்தே தமிழக மக்களின் கருத்து: ஸ்டாலின் ஆதரவு

உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாகவே தமிழக அரசின் மீது கடுமையான விமர்சனம் செய்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தியாளர் பேட்டியின்போது தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது என்று கூறியுள்ளார்...

விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் பட நாயகி குறித்த தகவல்

தளபதி விஜய் 'மெர்சல்' படத்தை அடுத்து பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை எனினும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன் மீது வன்கொடுமை சட்டம்: அமைச்சர் சி.வி.சண்முகம் 

உலக நாயகன் கமல்ஹாசன் தமிழக அரசை கடந்த சில மாதங்களாகவே கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதனால் அமைச்சர்களும் அவ்வப்போது கமல்ஹாசன் குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர். ஒரு அமைச்சர் கமல்ஹாசனை ஒருமையில் பேசிய சம்பவமும் நடந்தது.