பிரபல நடிகரின் சாதனையை பாராட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்

  • IndiaGlitz, [Sunday,May 28 2017]

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் நடித்த 'தங்கல்' திரைப்படம் ஏற்கனவே இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் வெளியாகி ரூ.700 கோடி வசூலாகி சாதனை செய்த நிலையில் சமீபத்தில் இந்த படம் சீனாவில் வெளியானது. கடந்த சில நாட்களில் சீனாவில் மட்டுமே இந்த படம் ரூ.825 கோடி வசூலாகி 'பாகுபலி 2' படத்தின் வசூலுக்கு கடும் சவால் கொடுத்து வருகிறது. சீன வசூலையும் சேர்த்து இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.1600 கோடியை நெருங்கிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே அமீர்கானின் 'பிகே' திரைப்படமும் சீனாவில் நல்ல வசூலை குவித்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாகவும் சீனாவில் அமீர்கான் படம் வசூல் சாதனை செய்துள்ளது.

சீனாவில் பெற்ற இந்த அபார வசூல் காரணமாக இந்திய திரையுலகினர் அமீர்கானுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களும் தனது சமூக வலைத்தளத்தில் அமீர்கானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சீன மக்களின் இதயங்களை மீண்டும் வென்ற அமீர்கானுக்கு எனது பாராட்டுக்கள்' என்று அவர் தெரிவித்துள்ளார்.

More News

தனுஷ் வெளியிட்ட 'சன்பெண்ட் ஆர்டர்'

தனுஷின் வொண்டர்பார் நிறுவனத்தின் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகவுள்ள 'காலா' படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் மும்பையில் தொடங்குகிறது...

வெங்கட்பிரபுவின் அடுத்த இறுதி வேட்பாளர் பட்டியலில் ஹீரோ, ஹீரோயின் வில்லன்

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபுவின் 'பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிக்கும் புதிய படத்தில் பணிபுரியும் டெக்னீஷியன்கள் மற்றும் நடிகர்களை வேட்பாளர் பட்டியல் அறிவிப்பது போல் தனது சமூக வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்டு வருகிறது...

ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்' டீசர் ரிலீஸ் தேதி?

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஸ்பைடர்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.

ரஜினியை சந்திக்கும் பிரபலங்கள்: சூடு பிடிக்கின்றது தமிழக அரசியல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் குறித்து ஒரு தீர்மானமான முடிவை எடுத்துவிட்டதாகவும், விரைவில் அனைவரும் எதிர்பார்க்கும் அந்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

நட்டி நட்ராஜின் 'போங்கு': திரை முன்னோட்டம்

'சதுரங்க வேட்டை', 'கதம் கதம்' போன்ற படங்களில் நடித்த நடிகரும் பிரபல ஒளிப்பதிவாளருமான நட்டி நட்ராஜ் நடித்த அடுத்த படம் தான் 'போங்கு' நட்டி நட்ராஜுடன், ரூஹி சிங், சுமன், பூஜா, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை தாஜ் என்பவர் இயக்கியுள்ளார்.