close
Choose your channels

'பிகில்' இயக்குனர் அட்லீ குறித்து பரவி வரும் வதந்தி!

Saturday, October 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில் இந்த திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

இந்த நிலையில் இந்த படம் ரூபாய் 180 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் விஜய்க்கு மட்டுமே ரூபாய் 50 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்காக இயக்குனர் அட்லீ ரூபாய் 25 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்பட்டாலும் இதுகுறித்த உறுதியான தகவல் இல்லை

இந்த நிலையில் ‘பிகில்’ படத்தை அடுத்து ஷாருக்கான் படத்தை அட்லீ இயக்க உள்ளதாகவும் ஷாருக்கான் படத்திற்காக ரூபாய் 40 கோடி அட்லீக்கு சம்பளமாக பேசப்பட்டு இருப்பதாகவும் ஒரு வதந்தி கோலிவுட் வட்டாரங்களில் பரவி வருகிறது

ஷாருக்கான் படத்தை அட்லீ இயக்குவதே இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் அதற்குள் சம்பளம் குறித்த வதந்தி இணையதளங்களில் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.