அஜித்தின் 'குட் பேட் அக்லி'.. பெண்களுக்காக சிறப்பு FDFS காட்சி..!


Send us your feedback to audioarticles@vaarta.com


அஜித் நடித்த ’குட் பேட் அக்லி’ என்ற திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், இந்த படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் பாசிட்டிவ் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
குறிப்பாக, அக்லி போர்ஷன் ஆக வரும் அஜித் இறங்கி சம்பவம் செய்து உள்ளார் என்றும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு, முழுக்க முழுக்க ரசிகர்கள் எஞ்ஜாய் செய்வதற்காகவே இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது என்றும், ஆதிக் ரவிச்சந்திரன் என்ற ஃபேன் பாய் மாஸாக படத்தை இயக்கி உள்ளார் என்றும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், திருப்பூரில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கில் பெண்களுக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட்டுள்ளது. அஜித் ரசிகர்களுக்காக, இந்த திரையரங்கு சார்பில் பெண்களுக்கு மட்டுமே சிறப்பு காட்சியை திரையிட்டுள்ளது மட்டும் இன்றி, படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, பெண்களுக்கு என சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்த திரையரங்கின் நிர்வாகத்திற்கு, அஜித் ரசிகைகள் தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே ரஜினிகாந்த், விஜய் போன்ற மாஸ் நடிகர்களின் படங்கள் வெளியான போதும், பெண்களுக்கு சில திரையரங்குகளில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அதேபோல், அஜித்தின் படத்திற்கும் பெண்களுக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com