நடிகர் சங்கத்திற்கும் தனி அதிகாரி: தமிழக அரசு அதிரடி

சமீபத்தில் விஷால் தலைமையான தயாரிப்பாளர் சங்கத்துக்கு தனி அதிகாரி ஒருவரை தமிழக அரசு நியமனம் செய்தது என்பதும் அதன் பின்னர் பாரதிராஜா, எஸ்வி சேகர் உள்ளிட்ட வழிகாட்டும் குழு ஒன்றையும் தமிழக அரசு நியமனம் செய்தது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தை அடுத்து நடிகர் சங்கத்துக்கும் தனி அதிகாரியை நியமிக்கும் திட்டத்தில் தமிழக அரசு இருப்பதாக கூறப்பட்டது. அதனை உறுதி செய்வது போல் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் மற்றும் செயலாளர் விஷாலுக்கு பதிவுத் துறை சார்பில் அனுப்பப்பட்ட நோட்டீஸில், ‘நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரியை நியமிக்க கூடாது’ என்று விளக்கம் கேட்கப்பட்டது

இந்த நோட்டீசுக்கு நடிகர் சங்கத்தில் இருந்து பதில் கடிதம் அனுப்பப்பட்டது. அதில் ’நடிகர் சங்கம் சிறப்பாக இயங்கி வருவதாகவும், எந்தவிதமான ஒளிவு மறைவும் இன்றி வெளிப்படையாக செயல்படும் நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தை சீர்குலைக்கும் வகையில் தை அதிகாரியை நியமிக்க கூடாது என்றும் தன்னிலை விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது

இந்த நிலையில் திடீர் திருப்பமாக தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கீதா என்பவரை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தனி அதிகாரியாக நியமனம் செய்து பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து நடிகர் சங்கத்தின் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

More News

கமல்ஹாசன் ஒருநாள் ஜனாதிபதி ஆவார்: பிரபல நடிகர்

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் இன்று மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாள் விழாவில் அவரது ஒட்டுமொத்த குடும்பத்தினரும் மற்றும் திரையுலகினர்

பரமக்குடியில் குவிந்த கமல்ஹாசன் குடும்பத்தினர்

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் பிறந்து வளர்ந்து சொந்த ஊரான பரமக்குடியில் அவருடைய தந்தை சிலை இன்று திறக்கப்படுகிறது.

கமல், மோகன்லால், சல்மான்கான் பட்டியலில் இணைந்த மகேஷ்பாபு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இருக்கும் 'தர்பார்' திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே.

சரவணன் - மீனாட்சி போல் செல்பிக்கு முயற்சி: பரிதாபமாக பலியான இளம்பெண்

சென்னை ஆவடி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தனது வருங்கால கணவருடன் பாழடைந்த விவசாய கிணறு ஒன்றில் செல்பி எடுக்க முயன்ற போது பலியான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது

அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்த தமிழ் திரைப்பட நடிகை!

பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரும், சிம்பு நடிக்கவுள்ள 'மாநாடு' திரைப்படத்தை தயாரிக்கவிருப்பவருமான சுரேஷ் காமாட்சி இயக்கிய 'மிக மிக அவசரம்' என்ற திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.