இளையராஜாவுக்கு ஆயுள் விருத்தி ஹோமபூஜை: எங்கே நடந்தது தெரியுமா?

இசைஞானி இளையராஜாவுக்கு கோவில் ஒன்றில் ஆயுள் விருத்தி ஹோம பூஜை நடைபெற்ற புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் பெரும் சாதனை செய்த இசைஞானி இளையராஜாவுக்கு திருக்கடையூர் கோவிலில் ஆயுள் விருத்தி ஹோமம் பூஜை விழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருக்கடையூர் என்ற பகுதியில் அபிராமி அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. தருமபுரி ஆதினத்திற்கு சொந்தமான இந்த கோவிலில் தான் மார்க்கண்டேயனுக்காக எமனை காலசம்ஹார மூர்த்தி வதம் செய்த வரலாறு உண்டு. இதனை அடுத்து இந்த கோவிலில் பல பிரபலங்கள் ஆயுள் விருத்தி பூஜை செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் 80 வயதான இசைஞானி இளையராஜாவுக்கு, திருக்கடையூர் கோவிலில் ஆயுள் ஹோம விருத்தி பூஜை இன்று நடைபெற்றது. இதற்காக இந்த கோவிலுக்கு வந்த இளையராஜாவை கோவில் நிர்வாகிகள் வரவேற்றனர். அதனை அடுத்து மங்கள வாத்தியம் இசைக்க இளையராஜாவுக்கான ஆயுள் விருத்தி ஹோம பூஜை தொடங்கியது.

இந்த பூஜையில் இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா, மகள் பவதாரணி, சகோதரர் கங்கை அமரன், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இளையராஜாவை நேரில் பார்த்த அந்த பகுதி ரசிகர்கள் அவரிடம் ஆசி பெற்ற நிகழ்வும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'மாநாடு' படத்தின் மொத்த வசூல் எவ்வளவு? தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தகவல்

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. அதன் பின் சில வாரங்களுக்கு முன்னர் இந்த படம் ஓடிடியிலும் வெளியாகி

விடுமுறை நாளை குறி வைத்த 'எஸ்.கே 20': ரிலீஸ் தேதி அறிவிப்பு

 நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'எஸ்.கே 20' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விடுமுறையை குறிவைத்து அறிவிக்கப்பட்டுள்ளது 

ஒதுங்கி போன உரசுவிக, பதுங்கி போன பாய்வீக: அருண்விஜய்யின் 'யானை' டிரைலர்

அருண் விஜய் நடிப்பில், இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவான 'யானை' திரைப்படம் ஜூன் 17ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு: இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தலைவி' என்ற திரைப்படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனவத் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே. இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியிருந்தார்.

'விக்ரம்' படத்தின் கதை இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவான 'விக்ரம்' திரைப்படம் வரும் 3ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் முன்பதிவு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக