'அசுரன்' ஆல்பத்தின் சூப்பர் ஸ்பெஷல் தகவல்: ஜிவி பிரகாஷின் அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,March 16 2019]

தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் 'அசுரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்திற்கு இசையமைத்து வரும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், இந்த படத்திற்கான பாடல்கள் கம்போஸிங்கில் கவனம் செலுத்தி வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தன

தற்போது இந்த செய்தியை ஜிவி பிரகாஷ்குமார் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதி செய்துள்ளார். 'அசுரன்' படத்தின் பாடல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் ஒரு சூப்பர் ஸ்பெஷல் தகவல் ஒன்றை வெளியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படம் ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் 71வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ், மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகும் இந்த படம் இவ்வாண்டு கோடை விடுமுறையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.