close
Choose your channels

பிரபல தமிழ் நடிகையின் கணவருக்கு அறுவை சிகிச்சை: மருத்துவமனை புகைப்படம் வைரல்!

Friday, March 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தமிழ் நடிகையின் கணவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

ரஜினிகாந்த் நடித்த ’சிவாஜி’ விஜய் நடித்த ’அழகிய தமிழ் மகன்’ விக்ரம் நடித்த ’கந்தசாமி’ தனுஷ் நடித்த ‘திருவிளையாடல் ஆரம்பம்’ உள்பட பல வெற்றித் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா சரண், ரஷ்ய நாட்டு டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை ஸ்ரேயா சரண் சமீபத்தில் பதிவு செய்த புகைப்படத்தில் தனது கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பதிவு செய்திருந்தார். ஸ்ரேயாவின் கணவர் ஆண்ட்ரே கோஸ்சீவ்க்கு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் இந்த அறுவை சிகிச்சையை சிறப்பாக செய்த மருத்துவமனை நிர்வாகம் மற்றும் உதவி செய்த நடிகர் ராம்சரண் மனைவி உபசன்னாவுக்கும் தனது நன்றி என்று ஸ்ரேயா அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.