close
Choose your channels

'வாரிசு' செகண்ட் சிங்கிள் தேதி இதுவா? இதிலும் ஒரு டுவிஸ்ட்!

Saturday, November 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்துள்ள நிலையில் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக உலகம் முழுவதம் ரிலீசாக உள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்திற்காக நடிகர் சிம்பு ஒரு பாடலை பாடி உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இந்த பாடல் வரும் டிசம்பர் 4ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அது மட்டுமின்றி இது ஒரு புரமோஷன் பாடல் என்றும் இந்த பாடலில் சிம்பு மற்றும் தமன் உள்ள கட்சிகளும் இருப்பதாகவும் இந்த பாடல் நிச்சயம் விஜய் மற்றும் சிம்பு ரசிகர்களுக்கு மிகச் சிறந்த விருந்தாக இருக்கும் என்று கூறப்படுவது சிம்பு ரசிகர்களுக்கான ஒரு டுவிஸ்ட் ஆகும். மேலும் இந்த பாடலின் புரமோ வீடியோ டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.