close
Choose your channels

விஜய்யின் 'புலியுடன் மோதுகிறதா அஜீத்தின் 'வேதாளம்?

Sunday, September 27, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாக இணையதளங்கள், சமூகவலைத்தளங்கள், பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி-வானொலி அனைத்திலும் புலி மற்றும் வேதாளம் படங்களின் செய்திகளே பெரும்பாலும் ஆக்கிரமித்து வருகின்றது. இந்த படங்களின் டிரெண்ட்டுகள் சமூக வலைத்தளங்களில் மாறி மாறி வருவதை அடுத்து அஜீத்-விஜய் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் 'புலி' படத்தின் இரண்டாவது டீசர் மற்றும் ஜிங்குலியா' புரமோ பாடல் ஆகியவை சூறாவளியை கிளப்பிவிட்டது. அதேபோல் அஜீத் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில் வரும் அக்டோபர் 1ஆம் தேதி 'புலி' படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அதே தேதியில் அஜீத்தின் 'வேதாளம்' படத்தின் டீஸர் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. எனவே மீண்டும் ஒருமுறை சமூக வலைத்தளங்கள் இரு பெரும் சூறாவளியை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.