நார்வேயில் ஒரு கிராமமே கடலுக்குள் மூழ்கியது!!! பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ காட்சி!!!

  • IndiaGlitz, [Saturday,June 06 2020]

 

டென்மார்க்கின் கோபன்ஹெகன் மாகாணத்தில் உள்ள ஆல்டா பகுதியில் கடந்த புதன்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவினால் சில மரங்கள் சாய்ந்திருக்கலாம் அல்லது வீடுகள் இடிந்து இருக்கலாம் என நாம் பொதுவாக நினைப்பதற்கு அதிக சாத்தியம் இருக்கிறது. ஆனால் ஒரு கிராமமே கடலுக்குள் சென்றது என்பதுதான் தற்போது பிரமிக்கும் விசயமாகப் பார்க்கப் படுகிறது. ஆல்டா பகுதி என்பது மலைப் பாங்கான நிலத்திற்கு அருகிலேயே கடல் இருக்கும் ஒரு பகுதியாகும்.

புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவின்போது, ஜான் ஃபிரெடெரிக் என்பவர் தனது வீட்டிற்குள் சான்விட்ச் தயாரித்துக் கொண்டிருநதார். வெளியே ஏதோ சத்தம் கேட்கிறது என வெளியே வந்து பார்த்தவருக்கு கடும் அதிர்ச்சி. நிலச்சரிவு ஏற்பட்டு ஒரு கிராமமே மிக அழகாக நீருக்கு மேல் மிதந்து சென்று கடலுக்குள் மூழ்கியது. இக்காட்சியைக் கண்டு மிரண்டு போகாமல் அருகில் இருக்கும் மலைக்கு சென்று மிக சாவகாசமாக வீடியோ ஒன்றையும் பிரடெரிக் பதிவு செய்திருக்கிறார். அடித்துச் செல்லப்பட்ட கிராமத்தில் அவருடைய வீடு ஒன்று இருந்தது. தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

பொது இடத்தில் அதிகாரியை செருப்பால் அடித்த பாஜக பெண் உறுப்பினர்!!! நடந்தது என்ன???

டிக்டாக் பிரபலம் மற்றும் பாஜக பெண் உறுப்பினருமான சோனாலி போகாட் விவசாய உற்பத்தி சந்தையில் வேலைப் பார்க்கும் அதிகாரி ஒருவரை பொது இடத்தில் வைத்து செருப்பால் சரமாரியாக அடித்துள்ளார்.

ரஜினிக்கு கொரோனா பாசிட்டிவ்: டுவீட் போட்டு பின் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்!

ரஜினிகாந்த்துக்கு கொரோனா பாசிட்டிவ் என காமெடிக்கு ஒரு டுவிட் போட்டு அதன் பின் ரஜினி ரசிகர்களால் கண்டனம் தெரிவிக்கப்பட்டதால் தனது செய்கைக்கு வருத்தம் தெரிவித்த பாலிவுட் நடிகர்

ஆந்திர அரசால் முடியும்போது, தமிழக அரசால் முடியாதா? விஜயகாந்த் அறிக்கை

ஆந்திராவில் ஆட்டோ, கால் டாக்சி ஒட்டுநர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது போல் தமிழகத்திலும் ஆட்டோ, கால் டாக்சி ஒட்டுநர்களுக்கு வழங்க வேண்டும்

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் கட்டணம் எவ்வளவு? தமிழக அரசு நிர்ணயம்

சமீபத்தில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் குறித்து ஐ.எம்.ஏ தனது பரிந்துரைகளை தெரிவித்து இருந்தது.

ஜார்ஜ் ஃபிளாய்ட் கொலை: இனவெறிக்கு எதிரான பேரணியில் கலந்து கொண்ட கனட அதிபர்!!!

அமெரிக்காவில் கடந்த மே 25 ஆம் தேதி ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் காவல் துறையினரின் பிடியில் சிக்கி உயிரிழந்தார்.