இதுதான் கொரோனா வைரஸ் சோதனை செய்யும் லட்சணமா? சஸ்பெண்ட் ஆன அதிகாரி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து தீவிரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

குறிப்பாக இந்தியாவில் விமானம் மற்றும் ரயில் பயணிகளுக்கு சோதனை செய்ய தெர்மல் ஸ்கேனர் கருவி பயன்படுத்தப்படுகிறது. இந்த கருவியின் மூலம் பயணிகளின் உடல் வெப்பநிலையை மூன்று வினாடிகளில் தெரிந்து கொள்ள முடியும். நார்மலான வெப்பநிலைக்கு அதிகமான வெப்ப நிலை இருந்தால் உடனடியாக அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? என்பதை கண்டுபிடிக்க ரத்த பரிசோதனை நடத்தப்படும்.

இதற்காகவே ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ஒரு சுகாதார அதிகாரி கையில் தெர்மல் ஸ்கேனர் கருவியை வைத்து கொண்டு பயணிகளுக்கு சோதனை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அதில் ஒரு சுகாதார அதிகாரி ஏனோதானோ என்று இந்த தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பயணிகளை சோதனை செய்கிறார். அதுமட்டுமன்றி அவர் ஒருகையில் செல்போனை வைத்து பேசிக்கொண்டு இன்னொரு தெர்மல் ஸ்கேனர் கருவியை வைத்து சோதனை செய்கிறார்.அவர் கவனக்குறைவான செய்த சோதனை செய்ததில் எத்தனை கொரோனா நோயாளிகள் தப்பிச் சென்றனர் என்று தெரியவில்லை.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து அதிரடி நடவடிக்கை எடுத்த அரசு அந்த சுகாதார அதிகாரியை சஸ்பெண்ட் செய்துள்ளது. உலகமெங்கும் கொரோனா வைரஸுக்கு எதிராக சுகாதார அதிகாரிகள், மருத்துவர்கள், நர்ஸ்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் போராடிக் கொண்டிருக்கும் போது இதுபோன்ற கவனக்குறைவான அதிகாரிகளால் கொரோனா மேலும் பரவும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

கொரோனா வைரஸ் குறித்து 'மாஸ்டர்' நடிகரின் விழிப்புணர்வு வீடியோ

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை திரையுலகை சேர்ந்த பலர் பதிவு செய்து வரும் நிலையில் 'மாஸ்டர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த் சாந்தனு

நம் எதிரே இரு அறைகூவல்: கொரோனா குறித்து வைரமுத்து

உலகமெங்கும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இன்று வரை கொரோனா வைரஸுக்கு 258 பேர் பாதித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 

கொரோனா வைரஸ்: கமல்ஹாசன் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை மத்திய, மாநில அரசுகளும், அரசியல் பிரபலங்களும், திரையுலகினரும் அவ்வப்போது வெளியிட்டு வரும் நிலையில்

நீட் தேர்வு; தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு சிறப்பு சலுகை!!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110 சட்டப்பிரிவின் கீழ் தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கான சில சலுகைகளை அறிவித்து இருக்கிறார்.

பொருட்களின்மீது தங்கும் கொரோனா பல மணி நேரம் வாழும் தன்மையுடையதா???

பிளாஸ்டிக் மற்றும் ஸ்டீல் பொருட்களின் மீது ஒரு நாளைக்கும் மேலாக கொரோனா வைரஸால் உயிர்வாழ முடியும்.