close
Choose your channels

இரவு 11 மணி வரை படப்பிடிப்பு: முடிவுக்கு வருகிறதா 'பொன்னியின் செல்வன்?

Monday, February 8, 2021 • தமிழ் Comments

பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒவ்வொரு நாளும் இரவு 11 மணி வரை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

தற்போது கார்த்தியின் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் கார்த்தி தனது பகுதியின் படப்பிடிப்புக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து வருவதாகவும், இரவு 11 மணி வரை படப்பிடிப்பு நடந்தாலும் அவர் தயங்காமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

மேலும் ’கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு விரைவில் ’பொன்னியின் செல்வன்’ படக்குழுவில் விக்ரம் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ஐஸ்வர்யா ராய் மற்றும் சரத்குமார் ஆகியோரும் தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

’பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு காலை முதல் இரவு வரை நடைபெற்று வருவதால் வரும் மார்ச் 5-ம் தேதி இப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படம் சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி வருகிறது என்பதும், இந்தப் படத்தை லைக்கா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முடிந்தாலும், ஏராளமான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் இருப்பதால் இந்த படம் வரும் தீபாவளிக்கு தான் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz