close
Choose your channels

அமலாபால் நடிக்கும் 'ஆடை' படக்குழுவின் வித்தியாசமான முயற்சி

Thursday, November 22, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அமலாபால் நடித்து வரும் 'ஆடை' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் அமலாபால் ஆடையில்லாமல் வெறும் காகிதங்களை உடம்பில் சுற்றி கொடுத்திருந்த போஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் 'ஆடை' படக்குழுவினர் இந்த படத்தில் ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அதுதான் லைவ் ரிக்கார்டிங். இதுகுறித்து இயக்குனர் ரத்னகுமார் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

'ஆடை திரைப்படத்தில் லைவ் சவுண்ட் அமைக்கவுள்ளோம். லைவ் இசைக்காக நாம் செல்லும் போது, வசனங்களை நினைவில் வைத்து கொள்தல், சரியான உச்சரிப்பு, நடை, முக்கியமாக செட்டில் அமைதி ஆகியவை சவாலாக இருக்கும். இருப்பினும் எங்கள் படக்குழுவிடம் இருந்து 100 சதவீத ஒத்துழைப்பு கிடைத்துள்ளதால் இந்த சவாலை நிறைவேற்றி வருகிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.