ஆதார் அட்டை கட்டாயமா? சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Monday,March 27 2017]

இந்திய குடிமகன் அனைவருக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என்று அவ்வப்போது வெளிவரும் அரசின் உத்தரவுகள் உறுதி செய்து வருகிறது. அரசின் நலத்திட்ட உதவிகள் பெற, வங்கி கணக்கு தொடங்க, ரேஷன் கார்டு விண்ணப்பிக்க, பான் அட்டை பெறுவது உள்பட அனைத்திற்கு தற்போது ஆதார் அட்டை கேட்கப்படுகிறது. மேலும் விரைவில் புதிய சிம் வாங்கவும், டிரைவிங் லைசென்ஸ் எடுக்கவும் ஆதார் அட்டை வேண்டும் என்ற நிலை வரவிருக்கின்றது. போகிற போக்கை பார்த்தால் சாலையில் நடப்பதற்கு கூட ஆதார் அட்டை கேட்கும் நாள் தொலைவில் இல்லை என்று சமூக வலைத்தளத்தில் காமெடியாக கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அரசின் நலத்திட்டங்களில் சலுகை பெற ஆதார் அட்டையை கட்டாயமாக்கக் கூடாது என்று வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை சற்றுமுன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'அரசின் நலத்திட்டங்களில் சலுகை பெற ஆதார் அட்டையை கட்டாயமாக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதே சமயத்தில் வங்கிக்கணக்கு தொடங்க ஆதார் கட்டாயம் என்பதை தடுக்க முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

More News

நயன்தாராவின் 'டோரா'வுக்கு 'A' சர்டிபிகேட். விக்னேஷ்சிவனின் வித்தியாசமான கமெண்ட்

லேடிசூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் தாஸ் ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'டோரா' என்ற திகில் திரைப்படம் வரும் 31ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது.

சாவித்திரி வாழ்க்கை வரலாறு படத்தில் சூர்யா?

நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் 'மகாநதி' என்ற பெயரில் உருவாகவிருக்கின்றது என்பதும், இந்த படத்தில் சாவித்திரி கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருப்பதும் தெரிந்ததே. மேலும் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் சமந்தா நடிக்கவுள்ளார் என்பதையும் சமீபத்தில் பார்த்தோம்...

'கடுகு' சிறுத்தாலும் காரம் குறையாத ஓப்பனிங் வசூல்

சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் நல்ல ஓப்பனிங் வசூலை பெற்றுள்ள 'கடுகு' திரைப்படம், கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழியை நிரூபித்துள்ளது...

எங்கிட்டே மோதாதே - பாம்புச்சட்டை படங்களின் ஓப்பனிங் வசூல் விபரங்கள்

நட்டி நட்ராஜ் நடித்த 'எங்கிட்டே மோதாதே' மற்றும் பாபிசிம்ஹா-கீர்த்திசுரேஷின் 'பாம்புச்சட்டை' ஆகிய படங்கள் ரிலீசுக்கு முன்னர் ஓரளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும் கலவையான விமர்சனம் காரணமாக சராசரி ஓப்பனிங் வசூலையே பெற்றுள்ளது...