சொந்த வீடு உள்ளவர்களுக்கு மத்திய அரசின் ஆதார் ஆப்பு!

  • IndiaGlitz, [Tuesday,June 20 2017]

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கு ஆதார் அட்டை என்பது கட்டாயம் என்றும் ஆதார் அட்டை இல்லாமல் வரும் காலத்தில் எந்த ஒரு செயலையும் செய்ய முடியாத நிலை வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்பொழுதே வங்கி கணக்கு தொடங்குவது முதல் பான் அட்டை பெறுவது வரை அனைத்திற்கும் ஆதார் அட்டை கேட்கப்படுகிறது.

இந்த நிலையில் 1950ஆம் ஆண்டிற்கு பின்னர் சொந்தமாக நிலம், வீடு வாங்கியவர்கள் தங்களுடைய நில ஆவணங்களோடு ஆதார் எண்ணை கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்று நில உரிமையாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் விவசாய நிலமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார் எண் இணைக்காதவர்கள் மீது பினாமி பணபரிவர்த்தனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. இதுகுறித்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய அரசு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், ' 1950ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட எந்த ஒரு நில ஆவணத்தையும் அது விவசாய நிலம் அல்லது விவசாய பயன்பாடு இல்லாத நிலம், வீடுகள் என எதுவாக இருந்தாலும், வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதிக்குள் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும். அத்துடன் நில ஆவணங்களுடன், நில உரிமையாளரின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். அப்படி இணைக்கப்படாத நில ஆவணங்கள், பினாமி பரிமாற்ற( தடுப்பு) திருத்த சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு உட்பட்டதாக கருதப்படும் என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

More News

அஜித்தின் அட்டகாசமான சர்வைவா பாடல் வரிகள்

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைத்த 'விவேகம்' படத்தில் இடம்பெற்ற சர்வைவா பாடல் நேற்று மாலை வெளியாகி இணையதளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளது...

மதுரையில் உள்ள 52 எஸ்பிஐ வங்கிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல்

வெடிகுண்டு மிரட்டல் செய்பவர்கள் இதுவரை ஒரு இடம் அல்லது இரண்டு இடங்களுக்கு மட்டுமே வெடிகுண்டு மிரட்டல் விடுவதுண்டு. இவற்றில் பெரும்பாலும் வதந்திகளாக இருப்பது உண்டு.

அஜித்தின் 'விவேகம்' படத்தில் எத்தனை பாடல்கள்: அனிருத் தகவல்

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் 'விவேகம்' திரைப்படத்தின் சிங்கிள் பாடலான 'சர்வைவா' பாடல் இன்று மாலை 6 மணிக்கு இணையதளங்களில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் மொத்தம் எத்தனை பாடல் என்பதை ஐடியூன் லிங்க் மூலம் அனிருத் உறுதி செய்துள்ளார்.

பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளர் அறிவிப்பு

இந்த நிலையில் இன்று ஜனாதிபதி வேட்பாளர் குறித்த முடிவெடுக்க பாஜக தலைவர்களின் சிறப்பு கூட்டம் டெல்லியில் நடந்தது.

ஜிஎஸ்டி வரியில் இருந்து தப்பியது திருப்பதி லட்டு

இந்தியா முழுவதும் ஒரே வரிமுறை என்ற முறையில் வரும் ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்படவுள்ளது.