இனி அஞ்சலகங்களிலும் ஆதார் அட்டை. புதிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,July 15 2017]

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகன்களுக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என்று கடந்த சில வருடங்களாகவே மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. தற்போது ஆதார் அட்டைகள் மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஆதார் அட்டை கிடைப்பதிலும், ஆதார் அட்டையில் திருத்தம் செய்வதிலும் காலதாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்
இந்த நிலையில் அஞ்சல் நிலையங்களில் புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கவும், ஆதார் அட்டையில் திருத்தம் செய்யவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல்துறை அறிவித்துள்ளது. முதல்கட்டமாக சென்னையில் அண்ணா சாலை, தி.நகர், மயிலாப்பூர், பரங்கிமலை, பூங்கா நகர் ஆகிய தலைமை அஞ்சல் நிலையங்களிலும், தேனாம்பேட்டை, அண்ணாநகர், அசோக்நகர், திருவல்லிக்கேணி ஆகிய துணை அஞ்சல் நிலையங்களிலும் ஆதார் அட்டை பெறுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வசதி படிப்படையாக தமிழகம் முழுவதிலும் உள்ள அஞ்சல் நிலையங்களில் அறிமுகம் செய்யப்படும் என்றும், இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறும் அஞ்சல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

More News

எல்லா கேள்விகளுக்கு இன்று பதில்: பிக்பாஸ் கமல் அறிவிப்பு

கமல்ஹாசனின் பிக்பாஸ் நிகழ்ச்சி முதலில் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக ஆரம்பமாகி இன்று ஒரு மாநிலமே அந்த நிகழ்ச்சி குறித்து விவாதிக்கும் அளவுக்கு உள்ளது.

கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் போராட்டம். புதிய தமிழகம் கிருஷ்ணசாமி

உலகநாயகன் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி ஏற்கனவே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களில் ஒருவராகிய காயத்ரி ரகுராம் கூறிய ஒரு சர்ச்சைக்குரிய வார்த்தை மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

தொப்புள் கருத்துக்காக மன்னிப்பு கேட்ட நடிகை டாப்சி

தனுஷ் நடித்த 'ஆடுகளம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை டாப்சி, அதன் பின்னர் தெலுங்கு, இந்தி என பிசியான நடிகையாக மாறினார்.

கமல்ஹாசன் முறையாக வரி செலுத்தியுள்ளாரா? அமைச்சர் கேள்வி

உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக தைரியமான ஒருசில கருத்துக்களை முன்வைப்பதும் அந்த கருத்துக்கள் சர்ச்சைகளாக மாறுவதுமான காட்சிகள் நடைபெற்று வருகின்றன.

விமர்சித்தால் மட்டும் போதாது! களத்தில் இறங்கி போராடுங்கள்: கமலுக்கு கருணாஸ் வேண்டுகோள்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே தனது பேட்டியிலும், சமூக வலைத்தள பக்கத்திலும் சமூக, அரசியல் கருத்துக்களை ஆவேசமாக தெரிவித்து வருகிறார்.