close
Choose your channels

ஆதித்ய அருணாச்சலம் என் அப்பா: 'தர்பார்' குறித்து பிரபல நடிகை

Friday, October 18, 2019 • தமிழ் Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாக உள்ளதால் படக்குழு, நேரம் இரவு பகலாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த இயக்குநர் ஏஆர் முருகதாஸ் ரஜினிகாந்த் இந்த படத்தில் ஆதித்ய அருணாச்சலம் என்ற கேரக்டரில் நடித்திருப்பதாக தெரிவித்திருந்தார். இதனை அடுத்து ஆதித்ய அருணாசலம் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது என்பது தெரிந்ததே 

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள பிரபல நடிகை நிவேதா தாமஸ் தனது சமூக வலைத்தளத்தில் ’ஆதித்ய அருணாச்சலம் என்னுடைய அப்பா’ என்று குறிப்பிட்டார். இதனால் அவர் ரஜினிகாந்தின் மகளாக இந்த படத்தில் நடித்துள்ளார் என்பது உறுதி ஆகியுள்ளது

ரஜினிகாந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, சுமன், ஆனந்த்ராஜ், ஸ்ரீமான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Get Breaking News Alerts From IndiaGlitz