இந்தியாவின் முதல் ரூ.2000 கோடி வசூல் படம் இதுதான்

  • IndiaGlitz, [Tuesday,June 27 2017]

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் நடித்த '3 இடியட்ஸ்' மற்றும் 'பிகே' ஆகிய திரைப்படங்கள் உலக அளவில் மாபெரும் வசூலை குவித்த இந்திய திரைப்படங்கள் என்ற பெருமையை பெற்ற நிலையில் அவருடைய இன்னொரு படமான 'தங்கல்' திரைப்படம் உலக அளவில் ரூ.2000 கோடி வசூல் செய்த முதல் இந்திய படம் என்ற பெருமையை தற்போது பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான இந்த படம் ஏற்கனவே வசூலை குவித்த நிலையில், சமீபத்தில் சீனா மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் வெளியாகி அந்நாட்டு ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றதால் இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.2000 கோடியை தாண்டியுள்ளது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.70 கோடி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை அறிந்த சீன அரசு இந்த படத்திற்கு வரிவிலக்கு அளித்து பெருமைப்படுத்தியது. ஆங்கில படங்களை தவிர்த்து உலக அளவில் அதிக வசூல் பெற்ற படங்களில் ஐந்தாவது இடத்தை 'தங்கல்' பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஏற்கனவே ரூ.1600 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள 'பாகுபலி 2' திரைப்படம் விரைவில் சீனா, மற்றும் தைவான் நாடுகளில் வெளியாகவுள்ளது. எனவே 'தங்கல்' வசூல் சாதனையை முறியடித்து ரூ.2000 கோடி வசூல் செய்யும் இரண்டாவது படமாக 'பாகுபலி 2' அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'பிரபுதேவா-தமன்னா' படத்தில் 'பாகுபலி' நாயகன்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் சக்ரி டோலட்டி இயக்கத்தில் உருவாகி வரும் 'கொலையுதிர் காலம்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே...

இறந்தவர் உயிருடன் வந்த அதிசயம்: 2 மில்லியன் டாலருக்கு வழக்குப்பதிவு

கலிபோர்னியாவை சேர்ந்த 81 வயது நபர் ஒருவரின் 57 வயது மகன் இறந்து, புதைத்த பின்னர் உயிருடன் வந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது...

தோனி என் உடன்பிறவா சகோதரர்: பிராவோ நெகிழ்ச்சி

பிரபல மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் பிராவோ, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியபோது தோனியின் நெருக்கமான நட்பை பெற்றார்...

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை. கவுதம் கார்த்திக்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் என்று அவருடைய ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் சீமான், சுப்பிரமணியன் சுவாமி உள்பட ஒருசில தலைவர்கள் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்று கூறி வருகின்றனர்...

ஜிஎஸ்டி வரிவிதிப்பால் இளையதலைமுறையினர்களுக்கு ஏற்படும் நன்மைகள்

வரும் ஜூலை 1 முதல் இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரிமுறையை மத்திய அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. இந்த வரிவிதிப்புக்கு பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில் இந்த வரிவிதிப்பால் இளையதலைமுறையினர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...