close
Choose your channels

ரூ.1000 கோடி பட்ஜெட் படத்தில் அமீர்கான் - பிரபாஸ்

Saturday, September 1, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரூ.1000 கோடி பட்ஜெட்டில் தயாராகவுள்ள 'மகாபாரதம்' என்ற பிரமாண்டமான படத்தில் பிரபாஸை முக்கிய வேடத்தில் நடிக்க அமீர்கான் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

முகேஷ் அம்பானி தயாரிப்பில் உருவாகவுள்ளதாக கூறப்படும் 'மகாபாரதம்' திரைப்படம் குறித்து ஏற்கனவே ஒருசில தகவல்கள் வெளிவந்ததை பார்த்தோம். அமீர்கான் 'கிருஷ்ணர்' வேடத்திலும் 'தீபிகா படுகோனே, திரெளபதி வேடத்திலும் நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் அர்ஜூனன் வேடத்தில் 'பாகுபலி' புகழ் பிரபாஸ் நடித்தால் நன்றாக இருக்கும் என அமீர்கான் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமான இந்த படம் மூன்று பாகங்களாக உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் கர்ணன், பீமன், நகுலன், சகாதேவன், துரியோதனன், சகுனி, உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களில் இந்தியாவின் முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.