மாடல் அவதாரம் எடுத்த எம்.பி… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Monday,March 28 2022]

ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர் ஒருவர் தற்போது பேஷன் ஷோக்களில் கலந்துகொண்டு பலரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறார். இவருடைய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

33 வயதான ராகவ் சதா என்பவர் கடந்த மாதம் நடைபெற்ற பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலின்போது ஆம்ஆத்மி கட்சி சார்பாக அம்மாநில பிரிவின் இணைப் பொறுப்பாளராக இருந்துள்ளார். மேலும் இவர் ராஜ்யசபா உறுப்பினராக இருந்துவரும் நிலையில் தற்போது பேஷன் ஷோக்களில் தலைக்காட்டி வருகிறார்.

அந்த வகையில் டெல்லியில் நடைபெற்ற லேக்மே பேஷன் வீக் ஷோவில் கலந்து கொண்டு ஷோ டாப்பராகவும் வந்துள்ளார். இவரைப் பார்த்த பலரும் ஒரு தேர்ந்த மாடலைப் போன்றே இருப்பதாகவும் அவரை பாராட்டி வருகின்றனர். டெல்லியைத் தவிர ஆம்ஆத்மி கட்சி ஆட்சி செய்யும் ஒரே மாநிலமாக பஞ்சாப் இருக்கிறது. அந்த மாநிலம் சார்பாக எம்பியாகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் ராகவ் தற்போது பேஷன் ஷோக்களில் கலந்து கொண்ட புகைப்படங்கள் பொதுமக்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.