close
Choose your channels

இவங்க தான் பொன்னாட: 'பகவான்' பட அப்டேட்டை கொடுத்த ஆரியின் வீடியோ வைரல்

Wednesday, June 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி, தற்போது 3 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் ’எல்லாம் மேல இருக்குறவன் பாத்துக்குவான்’, ‘அலேகா’ மற்றும் ’பகவான்’ ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்தது. மேலும் சமீபத்தில் அவர் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’பகவான்’ படத்தின் புதிய அப்டேட்டை ஆரி தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். ’பகவான்’ படத்தின் நாயகியை அறிமுகப்படுத்திய அவர், இவங்க தான் பூஜிதா பொன்னாட என்று கூறினார். மேலும் பொன்னாட என்றால் நாம் அணியும் பொன்னாடை அல்ல இது வேற பொன்னாட என்று கூறியபோது பூஜிதா ’எல்லோரும் என்னை பொன்னாடை என்று தமிழ் ஆடியன்ஸ் கேலி செய்கிறார்கள்’ என்று தெரிவித்தார்.

மேலும் ’பகவான்’ படத்தின் பூஜிதாவின் படப்பிடிப்பு இன்றுடன் முடிந்து விட்டதாகவும் தனக்கு இன்னும் இரண்டு நாள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் ’பகவான்’ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.