ஆரியை பார்த்து 'சார் யாரு? என கேட்ட நபர்: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Tuesday,April 13 2021]

கொரனோ விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆரியை பார்த்து ஒரு நபர் ’சார் யாரு? என்று கேட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாஸ்க் அணிவது குறித்த விழிப்புணர்வை மத்திய மாநில அரசுகள் ஏற்படுத்தி வருகிறது. அது மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரும் மாஸ்க் அணிந்து வெளியே செல்லுங்கள் என்று அறிவுறுத்தி வருகின்றனர்

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் வின்னரான ஆரி மாஸ்க் அணியாமல் வெளியே செல்பவர்களுக்கு மாஸ்க்கை கொடுத்து இனிமேல் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் கிராம பகுதி ஒன்றுக்கு ஆரி சென்று அங்கு வயதான ஒருவர் மாஸ்க் அணியாமல் இருந்ததை பார்த்து அவருக்கு ஆரியே மாஸ்க் அணிவித்தார். அப்போது அருகில் நின்ற ஒரு நபர் ’சார் யார்? என்று கேட்க அதற்கு ஆரியுடன் வந்தவர் ’பிக்பாஸ் ஆரி’ என்று கூறியவுடன் அவரா இவர்? என்று ஆச்சரியத்துடன் அந்த நபர் பார்த்தார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

ஆரி மாஸ்க் கொடுத்து உதவி செய்த வீடியோவை பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான சனம் தனது ட்விட்டரில் ஆரிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்

More News

இளம் நடிகருக்காக இணைந்த விஜய்சேதுபதி-கீர்த்தி சுரேஷ்!

தமிழ் திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவரான கௌதம் கார்த்திக் நடிக்கும் படத்திற்காக விஜய் சேதுபதி மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

'கர்ணன்' படத்தில் நடந்த தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி: மாரி செல்வராஜின் பதில் என்ன?

சமீபத்தில் வெளியான தனுஷின் 'கர்ணன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்பதும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் கொண்டாடி வருகின்றனர்

இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதி...!

ஏழ்மை நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் உட்பட பலரும் ரஷ்யாவின் இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரியார் சாலைக்கு பெயர் மாற்றம்? கடும் கண்டனம் வெளியிட்ட வைகோ!

சென்னை ரிப்பன் மாளிகையில் அருகே தொடங்கும் நெடுஞ்சாலைக்கு இதுவரை ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என்றே பெயர் இருந்து வந்தது.

கொரோனா- கோயில்களில் நடக்கும் திருமணங்களுக்கு புது கட்டுப்பாடு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று ஒரேநாளில் ஒன்றரை லட்சத்தைத் தாண்டி இருக்கிறது.