close
Choose your channels

கணவர், குழந்தையுடன் பிக்பாஸ் ஆரி பட நடிகை: வைரலாகும் புகைப்படங்கள்!

Tuesday, May 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரியுடன் ’நெடுஞ்சாலை’ திரைப்படத்தில் நடித்தவர் நடிகை ஷிவதா. மேலும் ‘ஜீரோ’ ‘அதே கண்கள்’ ’மாறா’ உள்ளிட்ட பல படங்களிலும் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி மலையாளத்திலும் இவர் பல படங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்று உள்ளார்

இந்த நிலையில் நடிகை ஷிவதா தனது நீண்ட நாள் நண்பரான முரளி கிருஷ்ணன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்தது என்பதும் அந்த குழந்தைக்கு அருந்ததி என்று பெயர் சூட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது

அவ்வப்போது தனது குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஷிவதா பதிவு செய்து வரும் நிலையில் அந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும். அந்த வகையில் சமீபத்தில் அவர் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு அளித்து வருகின்றனர் என்பதும் கமெண்ட்ஸ்களையும் லைக்ஸ்களையும் குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.