ஃபினாலே டாஸ்க்; கடைசி இடத்தை பிடித்த பின் ஆரி பேசிய மாஸ் பஞ்ச் டயலாக்

ஃபினாலே டாஸ்க்கில் ஒவ்வொரு போட்டியாளரும் மற்ற ஆறு போட்டியாளர்களின் குறையை சொல்ல வேண்டும் என்ற நிலையில் முதலில் தொடங்கும் ஆரி ஒவ்வொருவரின் குறையையும் அவருக்கே உரிய ஞாபகசக்தி மூலம் எப்போதோ நடந்ததை எல்லாம் ஞாபகப்படுத்தி கூறுகிறார். குறிப்பாக நீதிமன்ற டாஸ்க்கின்போது ரியோ என்ன செய்தார் என்பதையெல்லாம் ஞாபகப்படுத்தி கூறியதில் இருந்தே அவர் எந்த அளவுக்கு மற்றவர்களின் குறையை ஞாபகம் வைத்துள்ளார் என்பது தெரிகிறது

இதனையடுத்து ஷிவானி வழக்கம்போல் சுருக்கமாக ஒவ்வொருவரின் குறையை சுட்டிக்காட்டினார். அதன்பின்னர் சோம், ரியோ ஆகியோர்கள் தங்கள் பாணியில் குறைகளையும் மேம்போக்காக தெரிவித்தனர். ரியோ ஆரியை மட்டும் கொஞ்சம் அழுத்தமான குறைகளை கூறினார். அதன்பின்னர் குறைகளை சுட்டிக்காட்ட வந்த ரம்யா, மற்ற ஐந்து போட்டியாளர்களின் குறையை சொல்ல எடுத்து கொண்ட நேரத்தை விட ஆரியை மட்டும் குறை சொல்ல எடுத்து கொண்ட நேரம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ஆரியை பற்றி சொல்லும் குறைகள் எதுவும் விட்டு போய்விடக்கூடாது என்று இடையில் சில நொடிகள் யோசித்தும் ஆரியின் குறைகளை சுட்டிக்காட்டினார். குறிப்பாக ஒரு குருப்பில் ஐந்து பேர் இருந்து கொண்டு influence செய்வதாகவும், இன்னொரு குரூப்பில் நான்கு பேர்களிடம் influence பெறுவதாகவும் கூறும் நீங்கள், பலகோடி பேர்களிடம் influence பெறுவதற்காகவே குறைகளை சுட்டிக்காட்டுவதாய் நான் நினைக்கின்றேன்’ என்று ரம்யா கூறியது இதுவரை யாரும் யோசித்திராத ஒரு பாயிண்ட் ஆக தெரிகிறது

அதேபோல் பாலாஜி தான் பார்த்த குறையாக ஆரியை சொல்லும்போது ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு, கோபத்தை அடக்கி கொண்டு தன்னுடைய மொத்த ஆதங்கத்தையும் கொட்டினார். இவை அனைத்துமே ஏற்கனவே பலமுறை கேட்டதாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ரம்யாவை பற்றி கூறும்போது ’சுயநலம் இல்லாத நல்ல மனமுடையவர்’ என்று சர்டிபிகேட்டும் கொடுத்தார்.,

இந்த டாஸ்க்கில் போட்டியாளர்களே ஒருவருக்கொருவர் புள்ளிகளை பகிர்ந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டதால் போட்டியாளர்களின் வாக்கெடுப்பின்படி ஆரிக்கு கடைசி இடமான 7வது இடம் கிடைத்ததால் அவருக்கு ஒரு புள்ளி மட்டுமே கிடைத்தது. அந்த புள்ளியை பெற்று கொண்ட ஆரி, ‘வீட்டில் உள்ள மக்கள் என் பக்கம் இல்லை என்றாலும், வெளியில் உள்ள மக்கள் என் பக்கம் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் 7வது இடத்தை எடுத்து கொள்கிறேன், அப்படியே எலிமினேட் ஆவதானாலும் எனக்கு மகிழ்ச்சியே என்று ஆரி ஒரு மாஸ் டயலாகை கூறுகிறார்.

இதனையடுத்து பாலாவுக்கு 6வது இடம் கிடைத்ததால் அவருக்கு இரண்டு புள்ளிகள் மட்டுமே கிடைத்தது. அவர் கூறியபோது, ‘இந்த பிக்பாஸ் வீட்டில் என்னால் என்னுடைய குறைகளை மறைத்துக் கொண்டு விளையாடி இருக்க முடியும். ஆனால் நான் நானாக இருப்பதால் தான் மக்கள் என்னை ஏற்றுக்கொண்டால் இந்த ஷோவில் இருந்து நான் வெளியேறினாலும் என்னுடைய வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இருக்க முடியும். நான் பொய்யாக நடித்து போலியாக இருந்து நான் வெளியே சென்றால் நாளை இங்கே நான் செய்யாத தப்பை வெளியே செய்யும்போது சட்டையை பிடித்து கேட்பார்கள். அதற்கு நான் பதில் சொல்ல வேண்டியிருக்கும் ஆனால் இங்கே நான் என் குறைகளை எல்லாம் விட்டு விட்டு வெளியே நாளைக்கு சென்றால் நல்லது செய்யும் போது அது தான் எனக்கு கிடைத்த வெற்றியாக நான் பார்க்கிறேன் என்று கூறினார்

இதனையடுத்து 5வது இடத்திற்கு ரியோ, 4வது இடத்திற்கு ரம்யா, 3வது இடத்திற்கு கேபி, 2வது இடத்தில் ஷிவானி மற்றும் முதலிடத்தில் சோம் தேர்வு பெற்றனர்.

6 சுற்றுகளின் முடிவில் ரியோ 29 புள்ளிகளும், ரம்யா 27 புள்ளிகளும், ஷிவானி 26 புள்ளிகளும், சோம் 25 புள்ளிகளும், பாலா 25 புள்ளிகளும், ஆரி 20 புள்ளிகளும், கேபி 16 புள்ளிகளும், பெற்றுள்ளனர்.