நாம் தீயில் நடக்கலாம், ஆனால் அதை நாம் சேர்ந்து கடக்கிறோம்.. ஆர்த்தி ரவியின் கவிதை..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ஆகிய இருவரும் பிரிந்து விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்திருக்கும் நிலையில் சமீபத்தில் பாடகி கெனிஷா உடன் உடன் ரவி மோகன் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன் பின் ஆர்த்தி ரவி ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டு தனது ஆதங்கத்தை வெளியிட்ட நிலையில் நேற்று அன்னையர் தினத்தில் அவர் தனது மகன்களை நினைத்து எழுதிய கவிதை நெகிழ வைக்கும் அளவுக்கு உள்ளது. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்த கவிதையின் தமிழாக்கம் இதோ:
நீ என்னைப் பார்த்துப் பார்க்கும் பார்வையை பார்க்கிறேன்
நீ என்னை நலமா என சோதிக்கிறாய் போல,
ஆனால் உண்மையில் நான் கவலைப்படுவது உன்னை பற்றி தான்.
நீ வளர்ந்து கொண்டிருக்கிறாய்,
நான் மெதுவாக்க முடியாத ஒரு வேகத்தில்.
இப்படித்தான் நீ வளர வேண்டியதில்லை.
ஆனால் இங்கே நீ இருக்கிறாய்
பெரும்பாலோரை காட்டிலும் தைரியமாக,
அதையும் தாண்டி இன்னும் நல்லதாய் இருக்கிறாய்.
நீ பார்க்கிறாய் என்பதால்
நான் சில போர்களை நேராக நிமிர்ந்தெழுந்து செய்கிறேன்.
அதே நேரத்தில்,
நீங்கள் இன்னும் சிறுவர்கள் என்பதனால்
அந்த போர்களை மென்மையாய் நடத்துகிறேன்.
இந்த அன்னையர் தினத்தை
நான் என்னை கொண்டாடவில்லை.
என்னுடன் சென்று கொண்டிருக்கும்
இரு ஆன்மாக்களை மதிக்கிறேன்
நான் கற்றுக் கொடுக்க முடியாத ஒரு வலிமையுடன்,
ஆனால் அதைக் காணும் பெருமையோடு.
நீங்கள் இன்னும் சிறுவர்கள்தான்,
ஆனால் நீங்கள் உருவாகிக் கொண்டிருக்கும் ஆண்கள்
இந்த உலகம் சந்திக்க ஆசைப்படும் நபர்கள்
ஆரவ், அயான்
நாம் தீயில் நடக்கலாம்,
ஆனால் அதை நாம் சேர்ந்து கடக்கிறோம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments