சாப்பாட்டுக்கு என்ன பண்றிங்க: கிண்டலடித்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த அபிஷேக் பச்சன்

’தற்போது உங்கள் அப்பா கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பதால் சாப்பாட்டுக்கு நீங்கள் என்ன பண்ணுகிறீர்கள்’ என்று கிண்டலடித்த ரசிகர் ஒருவருக்கு அபிஷேக் பச்சன் சரியான பதிலடி கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராதித்யா ஆகிய நால்வருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து நால்வரும் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராதித்யா ஆகிய இருவரும் குணமாகி வீடு திரும்பினார். தற்போது அமிதாப் மற்றும் அபிஷேக் மற்றும் சிகிச்சை பெற்று வருவதாகவும் விரைவில் இருவரும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து கொண்டே அவ்வப்போது டுவிட்டரில் அமிதாப் மற்றும் அபிஷேக் டுவிட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் குறும்புக்கார ரசிகர் ஒருவர் டுவிட்டரில், ‘உங்கள் அப்பா மருத்துவமனையில் இருப்பதால் நீங்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். அப்பாவின் சம்பாத்தியத்தில் தான் அவர் வாழ்ந்து வருவதாக அவர் இந்த கேள்வியில் மறைமுகமாக கிண்டல் அடித்தார். இதற்கு பதில் கூறிய அபிஷேக், ’அப்பாவும் நானும் சேர்ந்து தான் மருத்துவமனையில் சாப்பிடுகிறோம்’. எங்களுடைய நிலைமை உங்களுக்கு வர வேண்டாம் என்று நான் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்’ என்று பதிலடி கொடுத்துள்ளார். அபிஷேக் பச்சனின் இந்த பதிலடி டுவீட் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.