ராணுவ வீரர் அபிநந்தன் கேரக்டரில் தமிழ் நடிகர்.. 5 மொழிகளில் வெளியானது வெப் தொடர்..!

  • IndiaGlitz, [Sunday,April 28 2024]

இந்திய ராணுவ வீரர் அபிநந்தன் என்பவரை பாகிஸ்தான் ராணுவம் சிறை பிடித்த நிலையில் அதன் பின்னர் அவரை விடுவிக்க மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகள் குறித்த தொடரில் அபிநந்தன் கேரக்டரில் பிரபல தமிழ் நடிகர் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து அதிரடியாக தீவிரவாதிகள் முகாம்களை தாக்கியது.

இந்த தாக்குதலில் இந்தியாவின் விமானப்படை விமானம் பாகிஸ்தான் பகுதியில் உள்ள கிராமத்தில் விழுந்த நிலையில் அதில் இருந்த போர் விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் சிறை பிடித்தது

இந்த தாக்குதல் சம்பவத்தை மையமாக வைத்து 'ரண்ணீதி: பாலகோட் அண்ட் பியாண்ட்’ (Ranneeti: Balakot & Beyond) என்ற வெப் தொடர் உருவாகியுள்ள நிலையில் இந்த வெப் தொடரில் அபிநந்தன் கேரக்டரில் தமிழ் நடிகர் பிரசன்னா நடித்துள்ளார்.

இதில் நடித்தது குறித்து அவர் கூறிய போது ’அபிநந்தன் கேரக்டரில் நடித்ததை நான் பெருமையாக கருதுகிறேன், இந்த சம்பவம் குறித்து வெளியான தகவலை விட கூடுதல் தகவல்கள் இந்த வெப் தொடரில் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக பாகிஸ்தான் எல்லையில் விழுந்த அபிநந்தன் ராணுவ ரகசியங்களை வாயில் போட்டு விழுங்கி மறைத்தார், மைனஸ் 4 டிகிரி குளிரில் அந்த காட்சி படமாக்கப்பட்டது, அந்த காட்சியில் நடித்தபோது நடுங்கி விட்டதாக தெரிவித்தார்

மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய சிலரை நேரில் சந்தித்ததாகவும் அப்போது அவர்கள் சொன்னதை கேட்டு தனது உடல் சிலிர்த்ததாகவும், இந்த வெப் தொடர் கண்டிப்பாக அனைவருக்கும் புது அனுபவத்தை கொடுக்கும் என்றும் பிரசன்னா கூறியுள்ளார். இந்த வெப் தொடர் தமிழ் உள்பட 5 மொழிகளில் ஜியோ சினிமாவில் வெளியாகியுள்ளது.

More News

மாஸ் நடிகர்கள் படங்களை குறை சொன்ன தமிழ் நடிகர்.. 'ஓரளவு உண்மைதான்' என ஒப்புக் கொண்ட வெங்கட் பிரபு..!

தமிழ் நடிகர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் மாஸ் நடிகர்கள் படங்களின் டிரைலரை குறை சொன்ன நிலையில், 'அது ஓரளவு உண்மைதான்' என இயக்குனர் வெங்கட் பிரபு ஒப்புக்கொண்ட பதிவு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

த்ரிஷா நடித்த படத்தின் படப்பிடிப்பு.. முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்..!

நடிகை த்ரிஷா தற்போது ஐந்து முன்னணி ஹீரோக்களுடன் ஒரே நேரத்தில் நடித்து வரும் நிலையில் அவர் நடித்து வரும் படத்தின் முக்கிய அப்டேட்டை அந்த படத்தின் இயக்குனர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

ரஜினி, அஜித், விஜய் பட நடிகரின் வாட்ஸ்அப் எண் முடக்கம்.. 61 மணி நேரத்தில் 9483 மெசேஜ்கள்..!

ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகரின் வாட்ஸ்அப் கணக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென முடக்கப்பட்ட நிலையில் அவருக்கு 9483 மெசேஜ்கள் வந்துள்ளதாக தகவல் வழியாக

கேப்டன் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது எப்போது? பிரேமலதா தகவல்..!

சமீபத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பத்மபூஷன் விருது வழங்குவதாக அறிவித்த நிலையில் கடந்த வாரம் நடந்த விருது வழங்கும் விழாவில் விஜயகாந்த் பெயர் இடம் பெறவில்லை

அனைவரும் எதிர்பார்த்த 'மஞ்சும்மெல் பாய்ஸ்' ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்.. தியேட்டரில் இல்லாத ஒரு இன்ப அதிர்ச்சி..!

மலையாள திரைப்படமான 'மஞ்சும்மெல் பாய்ஸ்' என்ற திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது என்பதும் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 236 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது