எனது முதல் பேபி ஸ்டெப்: கமல் பாணியை கடைபிடிக்கும் பிக்பாஸ் நடிகை!

  • IndiaGlitz, [Wednesday,March 03 2021]

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் இறுதி நாளன்று கமல்ஹாசன் தனது பெயரில் ஒரு கதராடை நிறுவனத்தை ஆரம்பித்து இருப்பதாகவும், தன்னால் முடிந்த அளவு கதராடை நெய்யும் நெசவாளர்களுக்கு உதவி செய்ய போவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் அவர் தனது நிறுவனத்தின் லோகோவை அன்றைய தினமே வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் கமலின் அறிவுரையை ஏற்று பலர் கதராடைக்க்கு மாறி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கமல்ஹாசன் பாணியில் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான அபிராமி வெங்கடாச்சலம் தனது பெயரில் புதிய ஆடை பிராண்ட் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

இது குறித்த இன்ஸ்டாகிராம் பதிவில் ’எனது முதல் பேபி ஸ்டெப் இது’ என்றும் ’என் பெயரில் ஒரு ஆடை பிராண்ட் வேண்டும் என்று என் வாழ்க்கையில் நான் ஒருபோதும் நினைத்ததில்லை’ என்றும் ’உங்கள் அனைவரும் ஆதரவும் தேவை’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அபிராமி வெங்கடாசலத்தின் இந்த புதிய முயற்சிக்கு எந்த அளவுக்கு ஆதரவு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'நெஞ்சம் மறப்பதில்லை' ரிலீஸ் பிரச்சனையில் திடீர் திருப்பம்!

எஸ்ஜே சூர்யா, ரெஜினா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பல முறை அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது.

’யாரையும் இவ்வளவு அழகா பார்க்கலை’: சுல்தான் படத்தின் சூப்பர் அப்டேட்!

கார்த்திக் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள சுல்தான் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே

உட்கட்சி விவகாரங்களில் எங்களை யாரும் நிர்பந்திக்க முடியாது- அமைச்சர் ஜெயக்குமார் கருத்து!

அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் எங்களை யாரும் நிர்பந்தப்படுத்த முடியாது என்றும் கூட்டணி விவகாரங்கள் தொடர்பாக கூட்டணியில் இருக்கும்

பிரியாணி சாப்பிடுவதால் இத்தனை ஆபத்தா? மருத்துவ நிபுணரின் அலர்ட் வீடியோ!

இன்றைய உணவு முறைகளில் மிகவும் ஈர்த்த ஒரு உணவாக பிரியாணி  இருந்து வருகிறது. இப்படி இருக்கும்போது

ஆரம்பமானது ஹரி-அருண்விஜய் திரைப்படம்: பூஜை புகைப்படங்கள் வைரல்!

பிரபல இயக்குனர் ஹரியின் அடுத்த திரைப்படத்தில் அருண் விஜய் நடிக்க இருப்பதாகவும் இந்த திரைப்படம் அருண் விஜய்யின் 33வது திரைப்படம் என்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.