விஜய்சேதுபதியை இயக்க போவது உண்மையா? இயக்குனர் ஆனந்த்சங்கர் விளக்கம்

  • IndiaGlitz, [Monday,April 22 2019]

விக்ரம்பிரபு நடித்த 'அரிமா நம்பி', விக்ரம் நடித்த 'இருமுகன்' மற்றும் விஜய் தேவரகொண்டா நடித்த 'நோட்டா' ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஆனந்த்சங்கர், அடுத்ததாக விஜய்சேதுபதி நடிக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும், சமீபத்தில் அவரை சந்தித்து கதை சொல்லி ஓகே பெற்றுவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது.

மேலும் இந்த படத்தை 'இருமுகன்', 'சாமி 2' போன்ற படங்களை தயாரித்த ஷிபுதமீன் தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது. 

இந்த நிலையில் தனது அடுத்த படம் குறித்து வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளில் உண்மையில்லை என்றும், தான் ஒரு நல்ல ஸ்கிரிப்டை எழுதி கொண்டிருப்பதாகவும், ஸ்கிரிப்ட் பணி முடிந்த பின்னரே அடுத்த படம் குறித்து அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் செய்தியின்படி விஜய்சேதுபதி, ஷிபு தமீன் கூட்டணியை தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.