close
Choose your channels

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றேனா? கமல் பட நடிகர் விளக்கம்

Tuesday, September 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பிரபல குணசித்திர நடிகர் எம்எஸ் பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் மற்றும் பிரபல நடிகர் நாசரின் மகனும் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவான ‘கடாரம் கொண்டான்’ படத்தில் நடித்த அபுஹாஸன் ஆகிய இருவரும் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியானது

இந்த நிலையில் தற்போது நாசரின் மகன் அபுஹாசன், தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இதனை அடுத்து அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இல்லை என்பது உறுதியாகி உள்ளது. ஆனால் அதே பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் ஆதித்யா பாஸ்கர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் இந்த நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், லட்சுமிமேனன், சஞ்சனாசிங், ரேகா, அனுமோகன், பாடகர் வேல்முருகன், உள்பட பலர் கலந்து கொள்கின்றனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.