ரஜினியுடன் இஸ்லாமிய பிரமுகர் சந்திப்பு: சிஏஏ குறித்து பேச்சுவார்த்தை?

குடியுரிமை சீர்திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையிலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வண்ணாரப்பேட்டையில் சிஏஎ சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இஸ்லாமிய அமைப்பினர்களை நேரடியாக சந்தித்து பேச ரஜினிகாந்த் முடிவு செய்ததாக வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடும் போராட்டக்காரர்களிடம் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பேசும் ரஜினிகாந்த் பேச்சுவார்த்தை நடத்த இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பேச்சுவார்த்தை இன்று அல்லது நாளை நடைபெறலாம் என்ற செய்தி வெளியான நிலையில் இன்று போயஸ் கார்டனில் ரஜினிகாந்துடன் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் நேரில் சந்தித்து பேசியுள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு இருப்பதாக ரஜினியிடம் அபூபக்கர் விளக்கம் அளித்ததாகவும் ரஜினியும் தனது தரப்பு விளக்கத்தை அவரிடம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் சிஏஏ சட்டம் குறித்த தனது கருத்தை ரஜினி மாற்றிக் கொள்வாரா? அல்லது இஸ்லாமிய அமைப்பினர் தங்களது போராட்டத்தை நிறுத்திக் கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

டாக்டர் மனைவிக்கு ஐஏஎஸ் அதிகாரி விதித்த வித்தியாசமான நிபந்தனை!

டாக்டர் பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் விதித்த வித்தியாசமான நிபந்தனை பெரும் அவரது சொந்த ஊரை சேர்ந்த பொதுமக்களை பெரும் ஆச்சரியம் அடைய வைத்துள்ளது.

கணவரை கொலை செய்துவிட்டு மகள் மீது பழி போட்ட தாய்! கள்ளக் காதலால் விபரிதம் 

சேலம் அருகே கணவனை கொலை செய்துவிட்டு அந்த கொலை பழியை தனது 16 வயது மகள் மீது போட்ட தாய் குறித்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நயன்தாராவின் அடுத்த படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்து வந்த படங்களில் ஒன்று 'மூக்குத்தி அம்மன்'. நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நாகர்கோவில்

நீங்கள் சராசரியாக மாதம் எவ்வளவு ஜிபி டேட்டா பயன்படுத்துகிறீர்கள் தெரியுமா..?

இந்தியாவில் தனி நபர் சராசரியாக மாதம் 11 ஜிபி டேட்டா பயன்படுத்துகிறாராம். ஒருவர் நாள் ஒன்றுக்கு சராசரியாக 70 நிமிடங்களை செலவழிக்கிறாராம்.

கொரோனா வைரஸ்.. அதிக மக்கள்.. இந்தியா தாக்குப்பிடிக்குமா?! அமெரிக்கா கவலை.

அமெரிக்கா இந்தியா மீது மட்டும் கவலை கொள்ளவில்லை. உலகில் இருக்கும் மற்ற வளரும் நாடுகளும் இதை எப்படி எதிர்கொள்ளும் என்ற சந்தேகத்தில் உள்ளது.