விஜய்யின் 'தளபதி 67': அர்ஜூனின் வேற லெவல் லுக்!

  • IndiaGlitz, [Saturday,January 28 2023]

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கி வரும் ’தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் காஷ்மீரில் நடைபெற இருப்பதாகவும் இதில் விஜய், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் இந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது ’தளபதி 67’ படத்தில் நடிக்கும் ஆக்சன் கிங் அர்ஜுனன் கெட்டப் குறித்த புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில் இந்த வேற லெவல் கெட்டப் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

நீண்ட மிசையுடன் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் அர்ஜூனின் இந்த கெட்டப்பை பார்க்கும்போது, ‘தளபதி 67’ படத்தில் அவரது கேரக்டரும் வித்தியாசமாக, இதுவரை அவர் நடித்திராத கேரக்டராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் ஜோடியாக த்ரிஷா நடிக்கும் இந்த படத்தில் சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், மன்சூர் அலிகான் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை லலித் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

More News

ரிசார்ட் ஓனருடன் 13 வருடங்கள் காதலா? கீர்த்தி சுரேஷ் அம்மா விளக்கம்!

நடிகை கீர்த்தி சுரேஷ் 13 வருடங்களாக ரிசார்ட் ஓனர் ஒருவரை காதலித்து வருவதாகவும் இன்னும் 4 வருடங்கள் கழித்து இருவரும் திருமணம் செய்ய போவதாகவும் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக செய்திகள்

சைனீஸ் கேர்ள் மாதிரி இருக்கு... ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் புகைப்படம்!

நடிகையும், பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் பிரபலம் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும்

கர்ப்பகாலத்தில் ஒரு பிகினி போட்டோஷூட்..  பிரபல நடிகர் மனைவியின் அசத்தல் போட்டோஸ்!

பிரபல நடிகரின் மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் கர்ப்ப காலத்தில் பிகினி உடையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள

அஜித் படத்தில் ஒரே ஒரு நாள் நடித்துவிட்டு திடீரென விலகிய 'வாரிசு' நடிகை.. என்ன காரணம்?

 அஜித் படத்தில் ஒரே ஒரு நாள் நடித்துவிட்டு அதன் பிறகு திடீரென அந்த படத்தில் இருந்து தான் விலகி விட்டதாக 'வாரிசு' படத்தில் நடித்த நடிகை கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

முதலமைச்சரின் மகளை திடீரென சந்தித்த நடிகர் சரத்குமார்.. என்ன காரணம்? 

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அவர்களின் மகள் கவிதாவை நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் சந்தித்துள்ளார்.