மூத்த மகள் திருமணத்தை அடுத்து காதலில் விழுந்த இளைய மகள்.. ஆக்சன் கிங் வீட்டில் மீண்டும் டும் டும் டும்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


ஆக்சன் கிங் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தம்பி ராமையாவின் மகன் உமாபதியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். கடந்த ஆண்டு இந்த திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு பிறகு, இளைய மகள் அஞ்சனாவும் காதலில் விழுந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கி, அதை வெற்றிகரமாக நடத்தி வரும் அஞ்சனா, 13 வருடங்களாக ஒருவரை காதலித்து வருவதாகவும், இப்போது தான் காதலை ஏற்றுக் கொண்டேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், காதலருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனை அடுத்து, ஆக்சன் கிங் அர்ஜுனின் வீட்டில் மீண்டும் திருமண மேளதாளம் ஒலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அஞ்சனா தனது காதலர் யார் என்பதை குறித்து இன்னும் தெரிவிக்கவில்லை. ஆனால், புகைப்படங்களில் பார்த்தபோது அவர் ஒரு வெளிநாட்டுக்காரர் போல் தெரிகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com