கமல்ஹாசனை அடுத்து மேலும் ஒரு பிரபல தமிழ் நடிகருக்கு கொரோனா!

  • IndiaGlitz, [Tuesday,December 14 2021]

உலகநாயகன் கமலஹாசன் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்த நிலையில் தற்போது ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் தனக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் நான் நன்றாகவும் பாதுகாப்பாகவும் இருக்கின்றேன் என்றும் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்றும் முகக்கவசம் அணிய மறக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்

சமீபத்தில் முடிவடைந்த ‘சர்வைவர்’ நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கினார் என்பதும் இந்த நிகழ்ச்சி தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு தீவில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தென்ஆப்பிரிக்காவில் தற்போது கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில் ஆக்சன் கிங் அர்ஜுனுக்கு ‘சர்வைவர்’ படப்பிடிப்பின்போது பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

More News

கணவரை கொலை செய்ய முயன்ற புதுமணப்பெண் தற்கொலை: கூலிப்படையினர் கைது!

திருமணமான ஒரே மாதத்தில் கணவரை கூலிப்படையினர் மூலம் கொலை செய்ய முயன்ற புதுமணப் பெண் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பத்திரிகையாளர் வேடத்தில் பிரியா பவானிசங்கர்: ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபல நடிகை பிரியா பவானி சங்கர், கிஷோர், ஷிரிஷ்  நடிக்கும் 'பிளட் மணி'  (Blood Money) என்ற படம் ஜீ5 ஓடிடியில் ரிலீஸ் ஆகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலநிறத்தில் உலகின் மிகப்பெரிய ரத்தினக்கல்… வியந்துபோன பொதுமக்கள்!

இலங்கையில் உலகிலேயே மிகப்பெரிய ரத்தினக்கல் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது

ஜாக்கியாகிவிட்ட ரவீந்திர ஜடேஜா… அசத்தலான வீடியோ வைரல்!

இந்தியக் கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக அசத்திவரும் ரவீந்திர ஜடேஜா தற்போது குதிரை ஜாக்கியாக மாறியிருக்கும் வீடியோவை

5 மொழிகளில் வெளியாகும் சூர்யாவின் அடுத்த படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூர்யாவின் அடுத்த திரைப்படம் 5 மொழிகளில் ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் சூர்யா ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது