மிரட்டினாலும் பயப்பட மாட்டேன், ஆதரவு தொடரும்: டெல்லி போலீஸ் வழக்கு குறித்து அமெரிக்க பெண் ஆவேசம்

  • IndiaGlitz, [Thursday,February 04 2021]

டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து பாப் பாடகி ரிஹானா தனது டுவிட்டரில் ஆவேசமான ஒரு கருத்தை தெரிவித்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா பெர்க் என்பவரும் தனது டுவிட்டரில் ஒரு கருத்தை தெரிவித்தார்

இந்தியாவில் போராடி வரும் விவசாயிகளுக்கு நாங்கள் இணைந்து ஆதரவாக நிற்கிறோம் என்று பதிவு செய்த கிரேட்டா பெர்க் கருத்துக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது. அதுமட்டுமின்றி அவர் மீது டெல்லி போலீஸ் வழக்கு பதிவு செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து கிரேட்டா பெர்க் தற்போது ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். அதில் ‘விவசாயிகளின் அமைதி வழிப்போராட்டத்தை இப்போதும் நான் ஆதரிக்கிறேன். வெறுப்பு விமர்சனம், மிரட்டல்கள், மனித உரிமை மீறல் இது எதையும் என்னை மாற்றி விடாது என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்ட பெர்க்கின் இந்த டுவிட் தற்பொது வைரலாகி வருகிறது