close
Choose your channels

நாகேஷ் திரையரங்கத்தில் நயன்தாராவின் நாயகன்

Saturday, August 27, 2016 • தமிழ் Comments

'நெடுஞ்சாலை' என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பெற்ற நடிகர் ஆரிக்கு திருப்புமுனையாக அமைந்த படம் 'மாயா. நயன்தாராவுக்கு நாயகனாக ஆரி நடித்த இந்த படம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் 'மானே தேனே பேயே', கதை எண் 6 உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் முகம்மது இசாக் இயக்கவுள்ள 'நாகேஷ் திரையரங்கம்' என்ற படத்தில் நாயகனாக நடிக்க ஆரி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் நாயகி இன்னும் தேர்வு செய்யப்படாத நிலையில் ஆரிக்கு அம்மாவாக பிரபல நடிகை பானுப்ரியா நடிக்கவுள்ளார்.
 
ரியல் எஸ்டேட் குறித்த கதையம்சம் கொண்ட இந்த படத்தில் ஆரி ரியல் எஸ்டேட் ஏஜண்ட் ஆக நடிப்பதாகவும் இன்னொரு முக்கிய கேரக்டரில் காளிவெங்கட் நடிப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
சென்னை தி.நகரில் ஒருகாலத்தில் புகழ் பெற்றிருந்த நாகேஷ் தியேட்டர் தான் இந்த படத்தின் கதையில் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.